Photo by M_K Photography on Unsplash
கதிரவன் மெல்லக் கரைந்ததும்
நிலவினை வரவேற்றிடும்
மாலைப் பொழுதினை ரசித்திடவே,
தேநீர் கோப்பையுடன்
காத்திருக்கின்றேன் தினமும்…
தேநீரின் கடைசித்துளி வரை
சுவையில் கரைவது போல்,
மாலைப் பொழுதின் அழகில்
மயங்கி உறங்கிப் போகின்றேன்
இயற்கையின் மடியில்…