Photo by Ash Gerlach on Unsplash
அழகான காலைப் பொழுதில்..
அமர்ந்தேன் சன்னலோரத்தில்..
கண்களுக்குக் குளுமையாய்
வழியெல்லாம் பசுமையும்…
செவிக்கு இனிமையாய் இசையும்..
தேகத்திற்கு இதமாய் தென்றலும்..
பயணச்சீட்டு வாங்கும் முன்னால்…
பயணத்தைத் தொடங்கினேன் கண்களால்…
பரபரப்புடன் பள்ளி,கல்லூரி
மாணவர்கள்..
கலகலப்புடன் கேலி அரட்டைகள்…
காதலியைப் பார்த்திடவே
பேருந்தில் சில இளைஞர்கள்…
அலுவலகம் சென்றிடும் பணியாளர்கள்…
சந்தைக்குச் சென்றிடும் விவசாயப் பொருட்கள்…இன்ப,துன்ப நிகழ்வுக்குச் சென்றிடும்
சில மனிதர்கள்…
யாவரும் ஒரே பேருந்து பயணத்தில்…ரசித்து அனுபவித்த பேருந்து பயணம்..
இன்றோ பயண அலுப்புத் தெரியாமலிருக்க முடங்கிவிட்டது
கைப்பேசிக்குள்…