Image by Hilary Clark from Pixabay
யுத்த களம்!!
வைய நீரூபமாக ஆழி சூழ !
தேன்மணம் கமழும் செங்கனியில்
பொன்கதிரும் மருங்கியது !
கருங்கொண்டலும் வாடைக்கச்சானும்
சண்டையிட்டு தென்றலாய் வீச !
சுவாசமுற்ற பாமரனும் - பாதை
வாசமின்றி அகதியாய் தோற்றமுற
கண்ணன் குசேலன் சுழற்சி முறையில்
அடி, குற்றமாய் பிறழ…
கருவிழியின் பசும்படலம் மறைந்து
வெண்முகில் அனுக்கத்தில்
கார்முகில் சூழ !
நொடி கனத்தில் !!
கனலி கண்ணசைக்க !
சப்ததோடங்களும் நிசப்திக்க !
கலை களம் களவர களமானது !
பேரொளியொன்று இடிமுரசாய் முழங்க !
செங்குருதியின் செந்நிறம் பதை பதைக்க !
நிழலின் ஓவியமாய், துயிலற்ற
சிற்றோட்டம் !!|
- காற்றின் ஓசை