Photo by Travis Essinger on Unsplash
இந்த உலகத்தில் பல நிகழ்வுகள் தினம் நடக்கிறது.சில நேரங்களில் அந்த நிகழ்வுகளை நாம் தூரத்திலிருந்து பார்க்கும்போது அது வேறொரு விஷயமாக தெரியலாம்.ஆனால் அந்த விஷயத்தை ஆராய்ந்துப்பார்க்கும்போது உண்மை வேறொன்றாக இருக்கும்.இதை வைத்து எழுதப்பட்ட கற்பனை கதை தான் நான் யார்.
ஒருவர் அவரை பணத்தேவைக்காக தேடிவரும் அனைவருக்கும் பணத்தை அள்ளிக்கொடுக்கிறார்.
இவரது வீட்டை தாண்டி எங்கும் சென்றதும் இல்லை ஆனால் இவருக்கு பணம் எப்போதும் இருந்துக்கொண்டே இருக்கிறது.அதை வைத்து இவரை தேடி வரும் அனைவருக்கும் பணத்தை தருகிறார்.
சில நேரங்களில் இவரிடம் இருக்கும் பணம் தீர்ந்த்துப்போகும்.அந்த நேரத்தில் சிலர் இவரிடம் வந்து பணத்தை கொடுத்துவிட்டு அமைதியாக சென்றுவிடுவார்கள்.திரும்பவும் இவர் அந்த பணத்தை இவரை தேடி வரும் அனைவருக்கும் கொடுப்பார்.
இவரது வேலை இதுவாகத்தான் இருக்கிறது.இவர் தங்கி இருப்பது ஒரு சின்ன வீடு தான்.இங்கு தான் பணத்தேவை உள்ளவர்கள் வந்து பணத்தை பெற்று செல்கின்றார்கள்.
யார் இவர் என்ற கேள்வி நமக்குள் இருக்கும்.
யார் இவர்...?
உண்மை என்னவென்றால் இவர் மனிதனே இல்லை.
இவளவு நேரம் நாம் பார்த்தது ATM Machineயை பற்றி.