Image by 0fjd125gk87 from Pixabay
1500ஆவது வருடம்...
ஒரு பாய்மர கப்பல் நடுக்கடலில் சென்றுக்கொண்டிருகிறது.அதில் பயணிக்கும் அனைவருக்கும் எதோ எதிர்மறை எண்ணம் தோன்றுகிறது,கேப்டன் உட்பட.
சிறிது நேரத்தில் காலநிலை மாறத்தொடங்குகிறது.இடி,மின்னல்,புயலும் தொடங்குகிறது.இதை அனைத்தையும் சமாளித்துக்கொண்டு இந்த கப்பலின் கேப்டன் மற்றும் மாலுமிகள் பயனிதுக்கொண்டிருகிறார்கள்.புயல் மோசமடையத்தொடங்குகிறது,கப்பல் கட்டுப்பாட்டை இழக்கிறது,இருந்தும் கேப்டன் நம்பிக்கையை இழக்கவில்லை.தன்னால் முடிந்தவரை கப்பலை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முயற்ச்சிக்கிறார்.
சில மணி நேரம் கழித்து இன்னொரு பெரிய ஆபத்து.
கடலில் ஒரு மிக பெரிய சுழல் உருவாகிறது.அந்த சுழலில் மாட்டிய கப்பல் வேகமாக வட்டமடிக்கத்தொடங்குகிறது.கேப்டன் தவறி சுழலில் விழுந்துவிடுகிறார்.
கண்விழித்து பார்த்த போது அவர் ஒரு தீவில் தனியாக இருக்கிறார்.யாரும் அங்கு இல்லை.இவரின் குழுவிற்க்கும்,இவரின் கப்பலுக்கும் என்ன ஆனது என்று தெரியவில்லை.இவருக்கு தண்ணீர் தாகம் எடுக்கிறது.சுற்றியும் கடல் நீர் மட்டுமே இருக்கிறது.இவர் சிறிது தூரம் நடந்து செல்லும்போது ஒரு பள்ளத்தில் மழை நீர் தேங்கி இருப்பதை பார்கிறார்.அடுத்த நொடியே இவர் அந்த நீரை அள்ளி பருகுகிறார்.
இவருக்கு தெரிந்த சில விஷயங்களை வைத்து நெருப்பைப் மூட்டி,கடலில் மீனைப்பிடித்து நெருப்பில் சுட்டு உண்கிறார்.அப்படியே மூன்று நாட்கள் கடந்தோடுகிறது.
தூரத்தில் ஒரு கப்பல் செல்வதை இவர் பார்கிறார்.உடனே தனது கைகளை அந்த கப்பலை நோக்கி அசைக்கிறார்.சிறிது நேரத்தில் அந்த கப்பல் இவரை நோக்கி வருகிறது.இவருக்கு பயங்கர சந்தோசம்.இருபினும் அந்த கப்பலை ஒரு வித ஆச்சிரயதுத்டன் பார்கிறார்.அந்த கப்பலில் இருந்து இருவர் இறங்கி வருகிறார்கள்.அவர்களிடத்தில் நடந்த விஷயங்களை சொல்கிறார்.அவர்கள் இவரை ஒரு சந்தேக பார்வையுடன் பார்கிறார்கள்.அந்த இருவரில் ஒருவர்,மூன்றுநாட்களுக்கு முன் எந்த ஒரு புயலும் வரவில்லையே என்று சொல்கிறார்.எது உங்கள் ஊர் என்று இன்னொருவர் கேட்கிறார்.ஷாமுல் எனும் ஊர் எனது ஊர் என்று சொல்கிறார் கேப்டன்.அந்த ஊர் கேள்விபடாத ஒன்றாக இருக்கிறது.
இருபினும் வாங்க நாங்க உங்களுக்கு உதவி செய்றோம் என்று இவரை அழைத்துக்கொண்டு அந்த கப்பலுக்குள் செல்கின்றனர்.
இந்த கப்பலில் பாய் மரமே இல்லை எப்படி இந்த கப்பல் செல்கிறது என்று அந்த இருவரிடம் கேப்டன் கேட்கிறார்.இதை கேட்ட அவர்களுக்கு வித்யாசமாக இருக்கிறது.இருந்தாலும் அவர்களில் ஒருவர் பதில் சொல்கிறார்.இது 2000மாவது வருடம் இப்போது நிறைய என்ஜின்கள் வந்துவிடது இப்போது பாய்மரம் தேவையில்லை.
என்னது 2000மாவது வருடமா இது 1500ஆவது வருடம் தானே இது என்று ஒரு அதிர்ச்சியில் கேட்கிறார் கேப்டன்.
இவர் என்ன மனநல பாதிக்கப்பட்டவரா என்று அந்த கப்பலில் உள்ள அனைவரும் நினைக்கின்றனர்.
அந்த கப்பலில் ஒரு போலீஸ் ஆபிசரும் இருக்கிறார்.அவர் கேப்டனிடம் விசாரிக்கிறார்.மீண்டும் அந்த இவரிடம் சொன்ன விஷயங்களையே இவரிடம் சொல்கிறார்.ஆனால் இந்த போலீஸ் ஆபிசருக்கு ஷாமுல் என்ற ஊர் தெரிந்திருக்கிறது.இவருக்கு ஒரு புத்தகத்தில் படித்த ஞாபகம் வருகிறது.ஷாமுல் என்பது பழயகாலத்து பெயர்.இப்போது அந்த இடம் வேறு ஒரு பெயரில் இருக்கிறது.இந்த கப்பல் அங்குதான் சென்றுக்கொண்டிருக்கிறது.
கப்பல் அந்த இடத்திற்க்கு சென்றதும் இதுதான் உங்கள் ஊரா என்று கேட்கிறார் போலீஸ் ஆபிசர்.
கேப்டனும் அந்த இடத்தை சுற்றிப் பார்க்கிறார்.ஆனால் இவரது இடம் போல் அது தெரியவில்லை.அப்படி இருக்கும்போது தூரத்தில் ஒரு லைட் ஹௌஸ் இடிந்த நிலையில் இருப்பதை பார்க்கிறார்.அதை பார்த்துவிட்டு இது தான் என்னுடைய இடம்.ஆனால் இந்த லைட் ஹௌஸ் இப்போது தான் கட்டப்பட்டது.இது எப்படி இடிந்து இருக்கிறது என்று கேட்கிறார் கேப்டன்.
என்ன இப்போது கட்டப்பட்டதா?இது 500வருடத்திற்க்கு முன் கட்டப்பட்டது என்று போலீஸ் ஆபிசர் சொல்கிறார்.
இல்லை ஒரு மாதத்திற்க்கு முன் தான் கட்டினார்கள்.இதை கவர்னர் அலெக்ஸ் தான் திறந்து வைத்தார்.என்னுடைய வீடும் இங்கு தான் இருந்தது.ஆனால் இப்போது இருந்த அடையாளமே தெரியவில்லை என்று புலம்பிக்கொண்டிருக்கிறார் கேப்டன்.
இதைக்கேட்ட அனைவரும் இவர் மனநல பாதிக்கப்பட்டவர் என்று உறுதிசெய்துவிடுகின்றனர்.இவரை மனநல மருத்துவமனையில் சேர்த்துவிட்டுவிடுகிறார்கள்.
சில நாட்கள் கழித்து.
இந்த போலீஸ் ஆபிசருக்கு அன்று நடந்த விஷயங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.அந்த நபர் சொன்னதில் உண்மை இருக்குமோ என்று நினைக்கிறார்.அவர் சொன்ன விஷயங்களை பற்றி ஆராய தொடங்குகிறார்.
500வருடத்திற்க்கு முன் உண்மையிலே அலெக்ஸ் என்று ஒரு கவர்னர் இருந்திருக்கிறார்.அவர் அந்த இடித்த லைட் ஹௌசை திறந்து வைத்திருக்கிறார் 500 வருடத்திற்க்கு முன்.இதை பார்த்த போலீஸ் ஆபிசர் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்.இந்த இடத்தில் கதை முடிவடைகிறது.