Photo by Sam Moghadam Khamseh on Unsplash

"ஹ்ம் சூப்பர் லிரிக்ஸ் எல்லாம் ஓகே நல்லாருக்கு ஒரு நாலு லைன் பாடு ரெஹெஅரசல் ஓகேனா இப்பவே ரெகார்டிங் முடுச்சுரலாம் என்று மியூசிக் டைரக்டர் சொல்ல"    எல்லாரும் ரெடி ஆகுறாங்க . அருண் பாடு பா என்ன சேகர் அண்ணன் சொல்ல அருண் பாட ஸ்டார்ட் பன்றான் .டைரக்டர் ஸ்டார்ட் னு சொல்ல அருன் பாட ஆரம்பிக்குறான் "தென்ற...ல் மகளே என்...". டைரக்டர் “யோவ் என்னயா இது இவனலாம் ஏன் யா இங்க கூட்டி ட்டு வறீங்க ? முதல ரெண்டு பேரும் கிளம்புங்க இங்கயிருந்து " .சேகர் அண்ணண் "சார் ப்ளீஸ் சார் இன்னொரு சான்ஸ் குடுங்க அவன் எப்படியாவது பாடிருவான் ஒரு காலத்துல நல்லா பாடுன பையன் சார் எங்க ஏரியா ல அடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் னு சொல்லி தான் சார் வளத்தோம் யாரு கண்ணு பட்டுசோ தெர்ல இப்ப இந்த நிலைமைல இருக்கான் ."

அருண் "சார் சாஆ...ரி நா ரொ.....ம்ப ப்ராக்சிடிஸ் பண்ணேன் ச ..ர் மா...ச ....மாசம் தி .....ர பி போ...ரேன் நல் ...ல ட்ரை...நிங் பண்ணுவேன் சார் நேத்து கூட பாட்டு பியூல்ல்ல படுச்சேன் எ...டி ...யா ..து பாடிறு லா னு நெனச்சேன் . பிளஸ் சார் இன்னொரு சான்ஸ் குடுங்க சார் " என்று கெஞ்சினான் அருண்.

சேகர் அண்ணன் "பெரிய பாடகன் ஆகணும் னு வெறியோட இருக்கான் சார் யார் என்ன சொன்னாலும் கேக்க மாட்டிகான் மிடில் கிளாஸ் பேமிலி சார் அவங்க சக்திக்கு தகுந்த மாதிரி டிரீட்மென்ட் பன்றாங்க எதும் செட் ஆகல எப்படியாது தட்டு தடுமாறி ரெண்டு பாட்டு நல்லா பாடிட்டான் நா அதுல கெடைக்குறத வச்சு பெரிய டாக்டர் ட காட்ட லானு இருக்கோம் கொஞ்சம் பாத்து ஏதாது பண்ணுங்க சார் ".

மியூசிக் டைரக்டர் அருண் தோளில் கை போட்டு "தம்பி நெனச்ச இடத்துக்கு போறதுக்கு நேரம் கொஞ்சம் முன்ன பின்ன ஆனாலும் பரவா இல்லப்பா ஆனா ரோடு நல்லா இருக்கணும் உன் மேட்டர்ல ரோடே குண்டும் குழியுமா இருக்கே! ரொமப கஷ்டம் பா. பேசாம ஒன்னு பண்ணலாமே! உன்னால பாட முடியலனா என்ன! எனக்கு அந்த லிரிக்ஸ் ரொம்ப புடுச்சுருக்கு அத எனக்கு குடுத்துடு பாட்டு எழுத நிறைய சான்ஸ் தரேன் வித் சாளரியோட அத வச்சு நீ குடும்பத்த பாத்துக்கோ என்ன சொல்ற " என்று கேட்டார் .இதை கேட்டதும் அருண் பதில் ஏதும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு சென்றான் .

பேருந்தில் சேகர் அண்ணன் அருணிடம் "ஏன்டா! எவ்ளோ பெரிய மனுஷன் உனக்காக வேலையும் குடுத்து காசும் தரேன்னு சொல்றாரு போயிட்டு வரேன்னு கூட சொல்லாம நீயாட்டு பெரிய இவனாட்டு போற இந்த பாரு ஏதோ பழகிட்டோமேனு சொல்றேன் இந்த பாடுறது கிளிக்குறதுனு விட்டுட்டு வேற எதையாவது பண்ணு“.இதை கேட்டதும் அருண் சேகர் அண்ணனிடம் "இன்னொரு மியூசிக் டைரக்டர் தெரியும்னு சொன்னிங்களே அடுத்த வாரம் போய் பாப்போமா " என்றான் .சேகர் அண்ணன் "நீ திருந்தவே மாட்ட செரி அடுத்த வாராம் போய் பாப்போம் . அதுக்குள்ள ரெடி பண்ண வேண்டியதுலான் பண்ணி வை என்ன புரியல? எல்லாம் பிரீயா கெடச்சுருமா? எவ்ளோ பேர பாக்கணும் எவ்ளோ செலவு ஆகும் ஒவ்வொரு தடவையும் உனக்கு தனியா சொல்லனுமா? ஸ்டாப் வந்துருச்சு எந்திரி ".

[அருண் ஒரு 23 வயது இளைஞன் சிறு வயதிலிருந்து நல்லா பாடியவன் எல்லாரும் அவனை பாராட்டி அவனுக்கு எப்படியாவது பெரிய பாடகனாகனும் னு ஆசை ஐ விதைத்தார்கள் . பாவும் யாரு கண்ணு பட்டதோ ஒரு சிறிய விபத்தினால் அவன் பேசு திறம் பாதிக்க பட்டது . ஆனால் எப்படியாவது அவன் பிரச்சணை சரியாகிவிடும் , பெரிய பாடகன் ஆகணும் என்ற வெறியுடன் முயற்சி செய்கிறான் .சேகர் அண்ணன் தான் அவன் ஏரியாவில் சினிமா அறிமுகம் உள்ளவர் . அதான் அவருடன் சேன்று வாய்ப்பு தேடி வருகிறான் .ஆனால் யாரு எதையும் எதிர்பாக்காமல் உதவி செய்வார்கள் ? ஒவ்வொரு தடவையும் அதுக்கு செலவு ஆகும் இதுக்கு செலவு ஆகும்னு பெரிய அமௌன்ட் அ வாங்கிருவாரு அவன் வீட்டிலும் என்னதான் கஷ்டம் இருந்தாலும் அருண் நிம்மதி கருதி அவன் சினிமா பயணத்திற்கும் அவன் சிகிசைக்கும் செலவலிக்குறார்கள் .அருண் கும் குடும்ப கஷ்டம் என்னனு இருந்தாலும் எப்படியாது பாடகனாகி சம்பாதித்து வீட்டை காப்பாத்தலாம் என்ற கனவுடன் முயற்சி செய்குறான். ]

வீட்டுக்குள் வந்த அருண் "அம்மா டீ எடுத்துட்டு வா " என்று சொல்லி தன் அறைக்குள் நுழைந்தான் . தன் அறையில் அவனின் சிறுவயது புகைப்படங்கள் இருந்தன .ஒவ்வொன்றிலும் அவன் சிரித்த முகத்துடன் இருந்தான் .ஆச்சிரியமாக இருந்தது . சினமும் கவலையும் கலந்த அருண் அப்பொழுது மட்டும் எவ்வளவு மகிழ்ச்சியாய் வாழ்ந்திருக்கிறான்! . ஒவ்வொன்றாய் பார்த்து சிரித்த அருன் அந்த ஒரு கோப்பையையும் புகைப்படத்தையும் பார்த்து மட்டும் கண்ணீர் மல்க அழுகிறான் .ஏனென்றால் அதுதான் அவனது கடைசி கோப்பை . அந்த புகைப்படம் தான் அவனது கடைசி பரிசு . அந்த நிமிடம் தான் அவனது வாழ்நாளில் கடைசி வெற்றி .

[ஐந்து வருடங்களுக்கு முன்பு]

கல்லூரியில் பாட்டு போட்டி போட்டி ஒருங்கிணைப்பாளர் அடுத்த போட்டியாளர் பெயர் சொன்னதும் அரங்கமே அதிர்ந்தது . அந்த பெயர் "அருண் ". அருணின் நண்பர்கள் அருணை பாராட்டி "கப்போடு தன வரணும் " என்று சொல்ல அவனின் மியூசிக் டீச்சர் "நான் சொன்ன ராகத்தை மறந்து விடாதே " என்று சொன்னார் .

அருண்க்கோ கரவொலியில் ஒன்றும் புரியவில்லை . ஆனால் , அவனுக்கு தெரியும் குரு என்ன சொல்லிருப்பார் என்று அவனோ பதிலுக்கு "இ கேன் டூ இட் " என்று தைரியமாக சொன்னான் . மேடையில் இருந்து அவனின் குரல் அரங்கத்தையே அதிர வைத்தது . அவன் உதட்டில் இருந்து வந்த ஒவ்வொன்று எழுத்தும் பட்டாசாய் வெடித்தது . ஒரு எழுத்துப்பிழை யோ , தயக்கமோ இல்லை . அவன் பாடி முடித்த பின்பு தான் அரங்கம் அமைதியானது .

இறுதியாக நடுவர்கள் போட்டியின் வெற்றியாளரை அறிவித்தனர் .எதிர்பார்த்ததை போலவே வெற்றியாளர் அருண் தான் . மேடைக்கு அழைத்த நடுவர்கள் அவனுக்கு கோப்பை குடுத்து ஊக்கவித்தார்கள் . பாவும் அவனுக்கு தெரியாது அதுதான் அவனது கடைசி வெற்றியென்று .

[சில நிமிடங்களுக்கு பிறகு]

அருணும் அவன் நண்பர்களும் கால்பந்து போட்டியை காண விளையாட்டு மைதானத்திற்கு சென்றார்கள் . அருணின் நண்பன் அசோக் "அந்த பாரு மச்சான் அந்த பொண்ணு சூப்பர் அ இருக்குல்ல எதாது பேச்சு குடுப்போமா? " என்று சொல்ல அருணோ "தேவையில்லா வேலைய பாக்காத " என்று எச்சரித்தான் . “அசோக் இந்த வயசுல இதல்லாம் பண்ணலேன்னா எப்படி டா சரி இப்ப நீ என்ன பாரு நெக்ஸ்ட் நீ ட்ரை பண்னு ஓகே ?" என்று சொல்லிவிட்டு சென்றான் . அருண் விளையாட்டை பார்ப்பதை நிறுத்திவிட்டு அசோக்

என்ன செய்கிறான் என்று பார்த்தான் . அசோக் அந்த பெண்ணிடம் "ஹலோ இ -சி -இ பிளாக் எங்க இருக்கு? " என்று ஆரம்பித்தான் . கவனம் சிதறி மைதானத்திற்கு எதிர்பக்கமாய் திரும்பி அசோக் ஐ கவனித்தான் .திடீரெண்டு விளையாட்டு வீரர் ஒருவர் முழுவேகத்துடன் அடித்த பந்து எல்லைகோட்டை மீறி முழு வேகத்துடன் அருணின் பின் மண்டையில் அடித்தது . காது மற்றும் மூக்கில் ரத்தம் வடிந்ததுடன் அங்கையே மயங்கி விழுந்தான் அருண் .

மருத்துவமனையில் அனுமதித்த அருணை பார்க்க வந்தார் அவனின் மியூசிக் சார் . டிப்ஸ் ஏத்தி பெட்டில் படுக்க வைத்திருந்த அருணை பார்த்து மனம் நொந்து போனார் . மியூசிக் சார் வந்ததை பார்த்த அருண் அவரிடம் பேச முயற்சித்தான் . அவனுக்கு இருமல் வந்தது . அவன் அருகில் இருந்த தண்ணீரை எடுக்க முயன்ற அருணுக்கு மியூசிக் சார் உதவினார் . அதற்கு பதில் அழித்த அருண் "ஐ கே ....ன் டூ ...இட் " என்றான் . நூறு பேர்க்கு முன்னாடி தைரியமாய் இசை விருந்து அளித்த அருண் இப்பொழுது பேச கூட கஷ்டப்படும் அவலத்தை கண்டு மனம் நொந்து போனார் மியூசிக் டீச்சர் .

[இன்று]

அழுது முடித்த அருண் கோப்பையை துடைத்து கொண்டிருந்தான் பின்னிருந்து "ரெகார்டிங் என்ன ஆச்சு ?" என கேட்டால் அருணின் தங்கை அனிதா . அருண் "அ......து எப்படி போன உனக்கு என்ன நீ உன் வேலை ......ய மட்டும் பா…….ரு " என்றான் . அதற்கு அனிதா "ஓ அம்மாவும் அப்பாவும் கேட்டாலும் இதான் சொல்லுவியா ? ".

அருண் பதிலுக்கு "அவங்ககிட்ட சொல்லிக்…..குறேன் எப்பையும் போலதான் சொதப்பிருச்….சு ஒருநாள் கண்டிப்பா நான் நெனச்ச மாறி ஆவேன்னு அவங்ககிட்ட சொல்லிக்குறேன் ".

அனிதா "ஓ நானும் இந்த வீட்லதான இருக்கேன் அப்ப எங்கயாவது போவா நானு ? " அருண் "லூசு மா ...ரி பேச.....தா அப் ...டி எங்க போ ...வ எங்கள விட்....டு ". அனிதா (அழுதுகொண்டு )" அனா நீ எங்கள விட்டுட்டு ரொம்ப தூரமா போர டா எவ்ளோ நாள் ஆச்சு தெரியுமா நீ சிறுச்சத பாத்து , எப்டி இருந்த நீ ! என்கிட்ட சண்டை போட்டு விளையாடி அம்மாக்கு ஹெல்ப் பண்ணி இப்பலான் நீ அப்பா கூட பேசுறதையே நிப்பாட்டிட பேச கூச்சப்பட்டுக்கிட்டு ஒதுங்கிப்போறியா இல்ல இல்ல யாரும் வேணான்னு விட்டுட்டு போறியா ?".

அருண் "நான் அப்படி பட்டவன்லான் இல்ல " .பேசை முடிப்பதற்க்குல் அனிதா "நீ அப்படிதான் பன்ற . ஒதுக்குறோம் உனக்கு கொஞ்சம் பிரச்சனை இருக்கு தான் அதுக்காக நீ தனியாவே இருக்க போறியா ? நாங்களும் உனக்காக இருக்கும் போது வெளிய போய் யாருக்காக இதல்லாம் பன்ற நீ நல்லா பாடுனப்ப கை தட்ண ப்ரண்ட்ஸ் எல்லாரும் இப்ப அவங்க பேமிலிய பாக்க போய்ட்டாங்க உன் மாஸ்டர்ர் அவரும் வேற ஸ்டுடென்ட் அ கவனிக்க ஸ்டார்ட் பண்ணிட்டாங்க அந்த சேகர் அவரும் நீ குடுக்குற அஞ்சு பத்துகாக தான் உன் கூட வராரு உன்ன பத்தி யோசிக்காத அவங்ககிட்ட நீ உன் திறமையை காட்டணும்னு நெனைக்குற எங்களுக்கு நீ பெருசா சம்பாதிக்க வேணாம் சாதிக்க வேணாம் நீ நீயா எங்க கூட இருந்தா மட்டும் போதும் . ".

கிளம்பும்போது அனிதா "டீ ஆறிட போகுது சீக்கரம் குடி " என்று சொல்லிவிட்டு செல்கிறாள் . அருண் மனம் மாற அவன் வாங்கிய கோப்பை எல்லாம் ஓர் அலமாரியில் வைத்து பூட்டுகிறான் இனிமேல் பழசை நெனைக்க கூடாது என்று .

[மறுநாள் மியூசிக் டைரக்டர் ரெகார்டிங் செய்யும் போது ]

மியூசிக் டைரக்டர் "தம்பி அருண் இவர்தான் பா உன் பாட்டை பாட போறாரு லிரிக்ஸ் அ கொஞ்சம் எக்ஸ்பிளேன் பன்னிரு ". அருண் "ஓகே சா….ர் நான் பாத்துக்…..குறேன் " என்றான்

.சிங்கர் "பாட்டு நல்லா வரும்னு தோணுது சார் கண்டிப்பா வேற லெவல் ஹிட் ஆகும் பாருங்க ! தம்பி எழுத்து அப்படி ! ". மியூசிக் டைரக்டர் "சும்மாவா சார் பையன் அவனுக்காக எழுதுன சாங் அ உங்களுக்கு குடுத்துருக்கான் நல்லா பண்ணி குடுங்க என்னோட நெஸ்ட் ப்ராஜெக்ட் எல்லாம் இவன் ஒர்க் பண்ண போறான் இன்னும் கொஞ்சம் நாள் ல பெரிய ஆளா வர போறான் பாருங்க " என்று அருணை பாராட்டினார்.

பின்னணி இசை ஆரம்பமாக சிங்கர் அருண் எழுதி கொடுத்த பேப்பர் பாத்து படுகிறார்.

"தென்றல் மகளே... என்
உணர்வின் உயிரே...
உன்னை தான் எந்தன்
நெஞ்சம் தேடுதே..."   

என தொடங்கும் அருண் ரசித்து எழுதிய பாடலை இன்னொருவர் பாட காண தான் பாடியது போல கற்பனை செய்து கொண்டு ரசித்தான.

முற்றும்.

.    .    .

Discus