Photo by Letizia Bordoni on Unsplash

என்னுடைய தேர்வு
சிறுமை குணத்தவர் தவறை எண்ணி,
சினத்தின் உச்சியில் நான்.
என் மூளையின் உள்ள அவர்களின்
நல்ல நினைவுகளை திரட்டி
பொறுமை கொண்டேன் நான்.

மறுக்கனம், நல்ல நினைவுகளே இல்லையென்றால்,
மறக்கவும் இல்லை, மன்னிக்கவும் இல்லை,
மனிதர்கள் இப்படித்தான் என கடந்து சென்றேன்,
முன்வினை பின் பதிலளிக்கும்
மனதுக்குள்ளே சொல்லிக்கொண்டேன்.

கரையோரம் முட்டும் அலைப்போல் அல்லாமல்,
கடல் நடுவே நீர்ப்போல் அமைதியாய் இருந்த என் மனம்.

ஏன் வேண்டும் இந்த அமைதி?
இரவில் விழி மூடியவுடன்
சட்டென்று வரும் உறக்கித்திற்காக!
வேறென்ன எழுதப்போவது என் பேனா?
எத்தனை பேருக்கு கிடைக்கும் இப்பாக்கியம்!
இறந்த பின் மட்டுமா அமைதி,
வாழும்போதும் கிடைக்க வேண்டாமா?

இறுதியாக,
யவருக்கும் தெரியாத ரகசியம்,
விருப்பம் எதுவாயினும்,
அமைதியை தேர்வு செய்தேன்,
அனைத்தும் என் விருப்பம்போல்
வந்தடைந்ததைக் கண்டேன்.
---------------நான்

.    .    .

Discus