Image by Marcin Paśnicki from Pixabay
ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்
விருப்பு வெறுப்பு இல்லாதவராக இருந்தார். ஆளும் கட்சி நலனையும் எதிர் கட்சி ஒழிப்பை மட்டுமே சிந்திக்காமல்
தேச நலன் தேசத்து மக்களின் நலன் , நல்வாழ்வு, சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு, கட்டமைப்பு
பொருளாதார முன்னேற்றம்
தொலைத் தொடர்பு இவைகளை
மட்டுமே சிந்திக்கிற நேர்மையான
ஆடம்பர மில்லாத எளிமையான
ஒரு விளிம்பு நிலை மனிதனாக சுய
தேவைகளை ஆசைகளை விலக்கி
விளம்பரம் இல்லாத
ஒரு முன் மாதிரியான
வாழ்க்கையில் தேர்ச்சி பெற்றவராய் சலனமில்லாத
தெளிந்த நீரோடையைப் போன்று
வாழ்ந்தார்
ஊழலின் நிழல் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் விழாதவாறு கண்ணும் கருத்துமாக,
சிரத்தையுடன் பார்த்துக்
கொண்டார்.
தன் நிலை தாழாமையும்
தாழ்ந்த பின் வாழாமையும் தான்
என் அரசியலமைப்புச் சாசனம் என்று
சூழுரைத்து கசடற வாழ்ந்தும்
காட்டினார்.
அவர் வாழ்வைச் சரியாகச் சொல்வதெனில்
எந்நேரமும்
ஒரு விஞ்ஞானியைப் போன்று
சிந்தித்துக் கொண்டே இருந்தார்.
ஒரு பாரபட்சமற்ற நீதிபதி யைப் போன்று தீர்ப்புக்கு உள் ஆகாதவாறு தீர்ப்புகளை வழங்கினார்.
ஒரு அனுபவமிக்க பேராசிரியரின் பேச்சுதிறன் அவரின் ஒவ்வொரு
ஒரு ஒலிம்பிக் போட்டியில் களம் காணும் வீரரைப் போன்று கட்டுமஸ்தான உடலை பேணிக்
தேசத்து மக்களின் அமைதி,
பாதுகாப்பு, வாழ்வாதாரம், முன்னேற்றம், மேன்மை களில்
மட்டுமே தன் முழுச் சிந்தனைகளை
செதுக்கு கின்ற மாபெரும்
சிற்பியாக தன்னை ஒவ்வொரு நாளும் செதுக்கிக் கொண்டார்.
குடிமக்கள் ஒழுக்கமும் நேர்மையும் தங்களின் இரண்டு கண்களாக ஏற்றுப்
போற்றி வாழ்வாங்கு வாழ்ந்தனர்.
ஆசிரியர்கள் உதாரணப் புருஷர்களாகத் தான் சொல்லுகிற அறிவுரைகளை
தானே செயல் படுத்துகிறவர்களாக
வாழ்ந்து காண்பித்தார்கள். மதிப்பெண்களை விட
மதிப்புமிக்க வாழ்க்கை
மேலானது என்றும்,
குறுக்கு வழியில் பெறுகின்ற
வெற்றியை விட
நேர்வழியில் பெறும் தோல்வி
மேலானது என்றும்
மாணவர்கள் மனதில் விதை
விதைத்து விருட்சம்
வளர்த்தார்கள்.
வெற்றிகரமான வாழ்வை விட
திருப்தி கரமான வாழ்வே
சாலச் சிறந்ததென்று
சான்று கொடுத்தார்கள். கல்வி
என்பது கல்லூரியோடு
முடிந்து விடுவதில்லை.
கற்றவற்றை உண்மையும் ஆர்வமும் கலந்து பயிற்சி செய்கிற பட்டறை தான்
வாழ்க்கை என்பதை
வலியுறுத்தி சொல்லி
வைத்தார்கள்.
வாழ்வில் ஒவ்வொரு நாளும்
கற்றுக் கொள்ள
மூடிய இருக்கிற மனக் கதவுகளை
திறந்து வைத்து
கற்றுக் கொள்ளுகிற
ஆர்வத்திற்கு அஸ்திவாரம்
போட்டு ஆரம்பித்தும் வைத்தார்கள்.
மாணவர்கள் கல்வியில்
ஒழுக்கத்தையும்
ஒழுக்கத்தோடு கல்வியையும்
கசடற கற்று
முயற்சி பயிற்சி யோடு
முனைப்போடு முன்னேறினார்கள்.
பெற்றோர்கள் பொறுப்போடு
பிள்ளைகளின் முதல்
முன்மாதிரி என்பதை
உணர்ந்து வாழ்வாங்கு
வாழ்ந்தார்கள்.
அரசுப் பள்ளிகள் ,கல்லூரிகள் பல்கலைக் கழகங்கள் - தனியார்
பள்ளிகள் ,கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் ஒன்றுக்கொன்று சளைத்தவைகள் இல்லையென்று தரத்தில், திறமையான ஆரியர்களை பணி அமர்த்துவதில்
கல்வி போதிப்பதில் ஒழுக்கம் மற்றும் நேர்மையான மனித நேயமிக்க
மாணாக்கர்களை உருவாக்குவதில்
உலகத் தரத்திற்கு ஒரு படி மேலே
உயர்ந்து கோலோச்சினார்கள்.
அரசு நிறுவன பாட சாலைகளின் கட்டணத்தை விட
தனியார் பாடசாலை நிறுவன கட்டணம்
இளைத்துப் போயிருந்தது
கல்விப் பணி புனித சேவையாக போற்றப் பட்டது!
அரசு அலுவலர்கள் நேர்மை மிக்கவர்களாக
கடமையில் கவரிமானாக செயல்
பட்டார்கள். கையூட்டிற்கு
கடவுச் சீட்டு கொடுத்து
கண் காணாத தேசத்திற்கு
நாடு கடத்தியிருந்தார்கள்.
விவசாயிகள் தேசத்தின் மதிப்பு மிக்க முதல் தர குடிமக்களாக
பிரகடனப் படுத்தப் பட்டார்கள்.
மனித குலத்திற்கு எதிரான
உயிர் கொல்லி இரசாயன
உரங்களையும்
இரசாயன பூச்சி மருந்துகளையும்
எந்தச் சூழலிலும் பயன் படுத்த மாட்டேன் என்று சபதம் செய்து
வேளாண்மை செய்தார்கள். மேலும்
அவைகளை பயன் படுத்துவதை
தேச விரோத மாக பாவித்தார்கள்.
நினைத்துக் கூடப் பார்க்க மறுத்தார்கள்.
கலப்படமில்லாத சரக்குகளை மட்டுமே கொள்முதலும்
விற்பனை யும் செய்வேன்
என்று வணிகர்கள்
சூளுரைத்து வணிகம்
செய்தார்கள்.!. தரம் தாழ்ந்து கொள்ளை இலாபம் அடைவதைவிட கொள்கைப்
பிடிப்பு டன் நியாயமான வருமானம் ஈட்டுவதில் பெருமை
கொண்டார்கள்.
என்னுடைய" மகிழ்ச்சி செல்வச் செழிப்பை விட நோயாளிகளை
பூரண குணம் அடையச் செய்வதே
என் பணி "என்று மருத்துவர்கள்
தெய்வத்திற்கு நிகர் ஆனவர்களாக
வழிபாட்டிற்கு உரியவர் களாக
உயர்ந்து நின்றார்கள்.
உடல் உழைக்கும் தொழிலாளர்கள்
கடமையில் கண்ணும் கருத்துமாக
பணியாற்றினார்கள். அவர்களின்
முழுத் தேவைகளையும்
அரசாங்கமே
"கன்றழைக்கும் முன்னே கருதி வரும்
"ஆ " போல "
ஓடிவந்து நிறைவேற்றியது.
அவரவர் அவரவர் வேளைகளில்
மனசாட்சி யோடு "இந்த வேலையை இவரைத் தவிர வேறு யார் செய்திருந்தாலும் இவ்வளவு
சிறப்பாக செய்ய முடியாது"
என்கிற முத்திரையைப் பதித்தார்கள்.!.
கோயில்கள் தேவாலயங்கள்
மசூதிகளில்
மக்களையோ பக்தர்களையோ
வேண்டுதல் வைப்போர்களையோ
காணவே இயலவில்லை.
எப்பொழுதெல்லாம்
ஏழ்மை, வறுமை, பசி ,பட்டினி, பெரும் பிணி,
பேரிடர் ஏற்படுகிறதோ
அப்பொழுதெல்லாம்
மனிதனுக்கு நம்பிக்கையைத்
தருகிற ஒரே உண்ணதமான விசயம்
பிரார்த்தனை!
நம்பிக்கை தருகிற இடம்
வழிபாட்டுத் தலங்கள் தான்!
தட்டுங்கள் திறக்கப் படும் என்றார்
யேசு மஹான்
தட்டாமல் திறக்கிறது அரசாங்கம்.
மக்கள் கேட்காமலே தேவையானவை யெல்லாம்
தேவைக்கு மேலே கிடைக்கிறது
ஆகவே வழிபாட்டுத் தலங்கள்
எல்லாம் வெறிச்சோடி இருந்தன.
இறைப் பணியில் ஈடுபட்டவர்கள் எல்லாம் நிறைப் பணியாக
செய்து மகிழ்ந்தார்கள்.
ஈ காகம் குருவிகளுக்கு கூட
அங்கே செல்ல வேண்டிய அவசியம்
எழ வில்லை
அமைதி ஆனந்தம் மகிழ்ச்சி
எங்கும் தீபச்
சுட ராய் ஒளி வீசியது
மாதம் மும்மாரி பொழிந்தது.
அந்த
மழையில் நனைந்தேன்
விழித்தேன்
"கலைந்தது கனவு."