என்னவென்றுச் சொல்ல...!
உலக புகழ்பெற்ற
திருவாரூர் தேரே
முதன்மையைக்
காட்டுகிறதே
அதைச் சொல்லவா...!
அல்ல
வள்ளுவர் கோட்டத்தின்
முன்னோடி என்றுச்
சொல்லவா....!
பிழையின்றி தொழிற்புரியும்
இன்சொல்
மக்களின் அன்பார்ந்த
சொற்களைச்
சொல்லவா...!
வறுமையிலும்
செம்மையாக வாழும்
மாண்பைச் சொல்லவா...!
கட்டுக்குள் அடங்காத
தென்றல் வீசுவதே
சொல்லவா...!
பற்றி அறியது
அவ்வூரின் சிறப்புப்
அதன் அணித்து
கிடந்திருக்கிறேன்
புதரில் தூவிய
விதைப் போல்...!