Image by Mohamed Hassan from Pixabay

ஒரு முக்கியமான போராட்டத்திற்கு பிறகு எடுத்த பட காட்சிகளை தொகுக்கும் வேலையில் தீவிரமாக இருந்தேன், குழு நண்பர்களுடன். சில கருத்து வேறுபாடிற்கு பிறகு தொகுக்கும் வேலையை முடித்தோம். என்னை அவளவு தெளிவான காரணம் இல்லாமல் பணி வேலையில் நிராகரித்த சிலருக்கு என் சார்ஜர் பயனாக இருந்தது எனக்கு மகிழ்ச்சி கொடுத்தது. சில நேரம் உரையாடிய பிறகு "பின் சந்திப்போம்” என வெளியேறினோம். பின் வேகமாக சென்று உணவு அருந்த ஒதுங்கினேன். சுவையான சாப்பாடு அடுப்பிலேயே விற்றுவிடும் என நம்புபவன் நான். தொடக்கத்தில் போராட்டமாக இருந்தாலும், வாடிக்கயாளர்கள் சேர்ந்த பிறகு அதன் புகழோ உச்சம் தான். இதை நினைக்கையில் நல்ல திரைப்படத்தின் பயணமும் அதுபோல தான் என புரிதல் முழுமை பெற்றது. உண்பதற்கு தேவையான உணவை தேர்வு செய்து கூறினேன். காத்திருப்பு இம்முறை சற்று அல்ல ரொம்பவே குறைவு. இட்லியின் மகிமை சாகும் வரை நீடிக்கும், ஏன்? அதற்கு பின்பும். அந்த நெகிழ்ச்சியுடன் அடுத்த போராட்டத்துக்கு தயார் ஆனேன். போராட்டமா? என் மூளை, அப்படி ஏதும் இல்லை தோழா என்றது மனம். 'உனக்கு எனக்கு இல்லாததா' என்றது. வெளி உலகம் காண வழி இல்லாமல் இவனை இயக்கும் நம்மளை விடவா?. இவன் வெளி உலகை கண்டு சற்று போராடி, மிகவும் அனுபவித்து உலாவி கொண்டிருக்கான். போராட்டம், ஆம் அனுபவித்து போராடி அல்லது சுலபமாகவும் கடந்து வரட்டும் அவன். இதை கேட்டு எனக்கு, போராட்டம் கண்டு பயம் கலந்த பொறுப்பு வந்தது. அடுத்த பேருந்தை பிடித்து பேருந்து நிலையத்திற்கு சென்றேன். போகும் வழியில் ஒருவர் பேருந்தில் ஏறினார். ஏறிய பின் இது பேருந்து தானா என ஒரு நோடி சுற்றி பார்த்து கொண்டார். பேசிக்கொண்டே இருந்தார் நின்ற படி. வியர்வை வழிந்தது நெற்றியில். அவர் வியர்வை, வேலை செய்தா இல்லை கைபேசியில் பேசி பேசி வந்ததா என குழப்பத்துடன் நின்று கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் அவர் பேசியதில் அவர் கை பேச தொடங்கிடுமோ என தோன்றியது. அவர் வியர்வையை கண்டுகொள்ளாமல் அவர் காது கைபேசி கேபிள் காற்று வாங்கி நடனமாடியதை கண்டதும் எனக்கு வெறுப்பு வந்தது. பின் அவர் உட்கார்ந்தார் கவலையுடன் மற்றும் பக்கத்து காரர்களிடம் விசாரித்தார் அவசரமாக. விசாரித்ததில் தான் கைபேசியின் சார்ஜ் முடிந்துவிட்டதாக சார்ஜர் கேட்கொண்டிருந்தார். இதை கேட்ட காது கைபேசி கேபிள் சோர்வடைந்தது, வியர்வை குளூர் காய்ந்தது. நான் புன்னகைத்தேன் சார்ஜருப்போய் இவ்வளவுவா என்று. பின் நான் உட்கார்ந்து கொண்டு பின் நின்றது போல உணர்வு வந்தது. என்னையே விசாரித்ததில் என் சார்ஜர் மறந்ததை உணர்ந்தேன். ஓடவும் முடியவில்லை தேடியும் பயனில்லை. அந்த அவரின் காது கேபிளைக் கண்டு வெறுப்பு அடைந்ததின் காரணம் இப்பொழுது புரிந்தது. மூளை இல்லாத மனிதன் யா என என் மூளை என்னை கிண்டல் அடித்து நொறுக்கினான். குழு தேவைக்காக வாங்கிய நபர் திருப்பி கொடுக்காதது நினைவுக்கு வந்தது. அந்த நபரிடம் விசாரித்தேன். பதில் இல்லை. கைபேசியின் பீப் செய்தி சத்தத்திற்காக காத்திருந்தேன். சில மந்நேரத்துக்கு பிறகு அந்த நபரின் பதில் கிடைத்தது. கேபிள் தன்னிடம் இல்லை என வந்தது. தொக்குக்கும் இடத்தில் தவறி விட்டதை சொன்னான். காத்திருந்ததில் சோர்வு அடைந்து உறங்கிவிட்டேன்.

புரண்டு படுத்த பின்பும் சார்ஜருக்கு மாற்றான எண்ணம் தோன்றவில்லை. ஜோரான மழை சத்தம். இரவு அழகாக இருந்தது. காண எந்திரித்தேன். பகல் கனவு என இயற்கை பதில் சொன்னது. விடிந்துவிட்டது. பெய்து கொண்டிருந்தது காலையில். கட கடவெண எழுந்திருக்க நினைத்தேன். கைபேசியில் உள்ள “ஸ்னூஸ்” முறை எனது நண்பன். சற்று உறங்கிவிட்டு எழுந்திருக்க வழி காட்டினான், நான் சம்மதித்தேன். 7:15 மணியளவில் எழுந்து கட கடவெண,இல்லை, மன்னிக்கவும். மெல்ல மெல்ல கிளம்பி புறப்பட்டேன். வழியில் மூளையின் விழிகள் இன்னும் விழித்தது. சார்ஜருக்காக மறுபடியும் அந்த காட்சி தொக்கும் இடத்திற்கு போகணுமா என்றது மூளையும், ஆச்சரியமாக மனமும். பின் தான் நினைவுக்கு என்ற வலிமைக்கு எர்பா நினைவுக்கு வந்தாள். வீட்டில் இருக்கும் சார்ஜரின் யோசனை வந்தது. அது இருந்தால் போதுமானது என்று உறுதியாக தோன்றியது. ஆனால் அதன் சரியான பின் மற்றும் இருபக்க வடிவத்தின் அடையாளங்கள் நினைவில் இல்லை. அம்மாவிற்கு கைபேசியில் தொடர்பு கொண்டேன். காலை வணக்கத்துடன் தொடங்கினேன். அம்மா பூரித்து போனாள். பின் சுயநலத்துடன் சார்ஜர் விவரங்களை கூறினேன். அம்மா கேட்டவுடன் அம்மாவின் ஓசை சார்ஜ் குறைந்தது. என் சார்ஜர் தற்காலிகமாக துளைந்ததிற்கு அம்மா வருந்தினாள். வீட்டில் இருக்கும் சார்ஜர் புகைப்படங்களை கேட்டவுடன் இன்னும் வருந்தினாள். என் தேவைக்கேற்ப புகை படம் சரியாக எடுத்து விட வேண்டும் என எண்ணினாள். நடந்து வந்து பேருந்து நிறுத்தம் இடத்தில் அமைதியாக நின்றேன்,மனதில் ஒரு சார்ஜர் மரத்தான் ஓட்டத்துடன். ஒரு மணி நேரம் கடந்தது. அம்மா வின் அழைப்போ என சத்தமில்லாமல் சத்தமில்லாத கைபேசியை பார்த்தேன். நான் மௌனமாக இருப்பதாக கைபேசி பதில் அளித்தது இருட்டுடன். காத்திருப்பு வெறுத்தவுடன் பேருந்து வந்தது. ஏறினேன், சிறுநேர பயணம் என்றதால் பேருந்து நிறுத்தும் இடம் பத்து நிமிடங்களில் வந்தது. உணவு உண்ண கடை பக்கம் உள்ள பக்கத்தில் இறங்கினேன்.உண்ணுகையில் இட்லி மெல்லமாக கரைய, தொட்டுக்கொள்ள உள்ள காய்கறியை என் பற்கள் அரைக்கும் சத்தம், அதனுடன் கைபேசி ஒலி சத்தமும் கேட்டது.அம்மாவின் செய்தி வந்தது.புகைப்படம் அனுப்பி இருந்தாள்.

திறந்த பின் பார்த்து சற்று பொறுமை கொண்டேன்.புகைப்படத்தில் பின் விவரங்கள் தெளிவாக இல்லை அதன்பின் புறம் ஜோலித்தது தரத்தில்.மறுபடியும் அம்மாவிடம் கைபேசியில் தொடர்பு கொண்டேன். புகைப்படத்தில், தேவையை சிவப்பு வட்டமிட்டு தெளிவுபடுத்தி அனுப்பினேன்.உணவு உண்டபின் அடுத்த பேருந்திற்காக காத்திருந்தேன்.சிரிது நேரம் கழித்து அம்மாவின் செய்தி வந்தது.அம்மாவின் கைகளின் தெளிவான படம் கண்பட்டது, சார்ஜரின் அரைகுரை காட்சி தோன்றியது.பேருந்து நிற்கும் இடத்திலிருந்து அம்மாவுக்கு தொடர்புகொண்டேன்.இம்முறை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டேன்.சார்ஜர் கண்முன் வந்தது.அம்மாவை சரியாக காண்பிக்க சொன்னேன்.தன் முகம் முன் காட்டினாள்.தெளிவு போதுமான அளவு இல்லை தன் பற்கள் திரையில் வந்த அளவிற்கு.முன் கேமரா அரிகுரியை அழுத்த சொன்னேன்.தேடினாள், கிடைக்கவில்லை.பயந்துகொண்டு கவலையுடன் தெரிவித்தாள்.செல்ஃபி கேமரா என்றேன்.புன்னகை யிட்டாள்.சந்தோஷத்தில் தேடினாள்.பதில் கிடைத்தது செல்ஃபி கேமரா பட்டன் கிடைக்கவில்லை என்று.தன் உறவினருடன் முன் கேமராவில் உரையாடி இருக்கிறார்.அதை யோசித்து அம்மாவிடம் சொல்லி பதில் எதிர்மறையாக வந்ததை கண்டு கோபப்பட்டேன்.உறவினர் பேச்சிற்குப் ஏற்ப செய்து, பேசி முடித்திருப்பாள், என மனதில் பதில் வந்தது. திரை ‘எடது’ மூளையில் அதன் அரிகுரி இருக்கும் என்றேன்.மேலா கீழா? என்றாள்.மேலே அல்லது கீழே என்றேன்.பின் முழு திரையிலும் தேட சொன்னேன்.இல்லை என்றாள்.பேருந்து நிற்கும் இடத்தில் இருந்த ஒருவரை கேட்டேன். தயங்கி மறுத்தார். பின் அவர் அருகில் இருந்த ஒரு பெண்மணியிடம் கேட்டேன். தயங்கினார். வீடியோ கையில் ஓடி கொண்டிருந்தது. ஒசை கேட்டது. அம்மா திரையில் தெரிந்தாள். அந்த பெண்மணிக்கு அம்மாவின் தயக்கம் தெரிந்தது. அப்பெண்மணி தயங்கி கைபேசியை காட்டினாள் அதை அம்மாவிடம் காட்டினேன். திரையில் கைபேசி வந்தது; அம்மா பார்வையில் அது புரிப்படவில்லை. பின் அந்த பெண்மணியிடம் அவர்களுடைய கைபேசி கேமராவை திறக்க சொன்னேன். என்னை ஒரு பார்வை பார்த்தார்கள், பின் திறந்தார்கள். அதில் அந்த முன் கேமரா அல்லாது செல்ஃபி அறிகுறி தென்பட்டது. அதை காட்டினேன். அம்மாவிற்கு அது காணப்படவில்லை என வெளிப்படுத்தினாள்.தெரியவில்லை என்றாள்.பின் அந்த அறிகுறியை தெளிவாக படமெடுத்து வட்டமிட்டு அனுப்பினேன்."ஆன்.." சரி என்றாள்.

சற்று தைரியம் வந்தது.உதவிய பெண்மணிக்கும் அங்கு இருந்த ஒரு நபர்க்கும் நன்றி கூறினேன்.அம்மா தேடிவிட்டு இல்லை என்றாள்.பின் கடுப்பாகி கைபேசியை, "ஹ்ம்ம" சொல்லிவிட்டு வெளியேற்றினேன்.பேருந்து வந்தது.அவர்களிடம் சிரித்து விட்டு பின் எல்லோரும் புறப்பட்டோம்.அரை மணி நேரம் கழித்து அம்மாவிற்கு தொடர்பு கொண்டு வெளியே தெரிந்தவர்கள் இருந்தால் கேட்டுப் படம் அனுப்ப சொன்னேன்.இல்லை வேலைகாரி மகள்கள் வந்தால் அந்த சார்ஜரின் படம் அனுப்ப சொன்னேன்.சரி அது சரியான வழி என்று கைபேசியை வைத்தாள்.ஒன்றரை மணி நேரத்திற்கு பின்பு அம்மாவின் செய்தி, படம் வடிவத்தில் எழு எட்டு வந்தது. திறக்கையில் ஒரு கவனம் கலந்த சந்தோஷம்.திறக்கும் முன் அதன் படத்தின் உள் வடிவத்தை பார்க்கையில் நம்பிக்கை பெற்றேன். திறந்தேன், 5 படங்களில் தெளிவு இல்லை, சிலவற்றில் பயனில்லை. ஒன்று லாட்டரி போல சிக்கியது. திறந்தேன், பின் தெளிவாக தெரிந்தது. பெரிதாக செய்தேன். தெளிவாக B வகை சார்ஜர் வடிவத்தை கொண்டிருந்தது. எனது தேவைக்கேற்ப C வகை தான் என் மூளையின் ஆழ்ந்த எண்ணங்களின் ஓட்டத்தை ஒரு வகை படுத்தும். அம்மா விடம், அது செவ்வகம் வடிவத்தில், ஓரத்தில் மற்றும் வலயம் என்ற அறிகுறி சொல்லிருந்தேன். அது அம்மாவின் ஆழ்ந்த கவனித்தினால் சில நேரம் கவனம் இருந்தது, நீண்ட நினைவில் இல்லை. அம்மாவிடம் பேசுகையில் வேலைகாரி வந்ததாகவும் அவள் மகள் உதவி செய்ததாகவும் சொன்னாள்.பக்கத்து வீட்டு காரர்களை வெளியே தேடுகையில் அவர்கள் வெளியே வராமல் பாதுகாப்பாக வீட்டுள் இருந்தார்கள் என்று அம்மா பேசுகையில் நான் உணர்ந்தேன். பேருந்து பாதி தூரம் கடந்தது. கூட பயணிக்கும் நபர்கள் சார்ஜ் போடுகையில் அல்லது சார்ஜ் சரியாக "கூட" இருக்கும் என எதேச்சியாக பார்க்கையில் அல்லது கேள்வி படுகையில் சற்று என் மனம் வருந்தியது என்பது உண்மை.

அடுத்த நிறுத்தத்தில் தேநீர் அருந்தினேன். அம்மா பயணத்திற்கு செய்து கொடுத்த ஊர்கா போல முன் வாங்கிய பிஸ்கட் உடன் தேநீர் அருந்தினேன். தேநீர் தொண்டை குழியில் வேகமாக இறங்குவதற்கு முன்பு பேருந்து போட்டி போட்டு வேகமாக புறப்பட தொடங்கியது.விரைந்து பிடித்தேன். நகர்ந்தது, தேநீரின் சுவையை மனதளவில் ஆனந்தம் கொண்டேன். தொண்டை குழி, என்னுடன் கை இல்லையானாலும் கண்ணம் கோத்து ஆனந்தம் கொண்டது. யோசித்து சற்று கண் திறந்து, தலை சாய்த்தேன். மனமும் ஒய்வெடுக்க சாய்ந்தது, மூளை கக்ஷ்டம் கொடுத்தது சாய்கையில். நேரம் கடந்தது. இடங்கள் தாண்டின. கூட்டம் சேர்ந்தது. வேகம் குறைந்து ஏரி, குறைந்து ஏரி பயணம் சென்றது. குளிரின் வெப்பம் ஏற தொடங்கியது. பிஸ்கெட்ஸ் துணையுடன், தொந்திரவுடன் சேர்ந்த தூக்கத்தின் துணையுடன் பயணம் முடிவடைந்தது. சேரும் பேருந்து நிலையம் வந்தது. கடுப்பு வந்து கொண்டே இருந்தது. நிறைவு பெறவில்லை. கீழே இறங்கி சுற்றி பார்த்தேன். கிளம்பும் போது என்னுடன் இருந்த சார்ஜர், திரும்பி வருகையில் என்னிடம் இல்லை என வருந்தினேன். காரணம், அம்மாவின் புகைப்படம் செய்தி என்று கோவம் அதிகரித்தது.இது ரொம்ப அதிகபிரசங்கி தனம் என மனதின் ஒரு ஓரத்தில் குரல் கூறியது. படத்தொகுப்பு இடத்தில் மறந்தது இந்த இளமை மூளை கொண்ட நபர்கள் தான் என, இந்த தவறு செய்த முதியவரை குறுக்கிட வேண்டாம் என மனம் சற்று சொல்லியது. பற்றுடன் சொல்லவேண்டிய மனம் அமைதியாக சற்று கூறியதில், மனதோடு நடந்துகொண்டேன் என்றது. சற்று தயங்கி மரியாதை வந்தது. நடக்க தொடங்கினேன். கவனம் செதராமல் நடந்தேன். கவனம் ஒன்று. சார்ஜர் மற்றும் அதை சார்ந்த அம்மாவின் கைபேசி செய்திகள். வீடு வந்து சேர்ந்தேன். கைபேசியின் சார்ஜ் முடிவிற்கு வந்தது. அம்மா மின்விளக்கு போட்டு வாசலில் என்னை வரவேற்றாள். அவள் முகத்தில் சற்று பயம் இருந்தது. பசி தாங்க மாட்டேன் என இந்த நடந்துவந்த இளமை வளர்ந்த குழந்தைக்கு பழங்கள் அவசரத்திற்கு மின்னொடியில் கொடுத்தாள். நடந்துவந்ததை அவள் திரும்பி முதல் படி நடப்பதற்கு முன்பு கணக்கு போட்டிடுவாள்.காரணம் சுய விளக்கத்துக்கு உள்ளானது. உண்டேன். சற்று பலம் வந்தது. பலத்துடன் அம்மாவை கேள்வி கேட்க தொடங்கினேன். தன்னால் முடிந்ததை செய்தேன் என்றாள். என்னால் முடிந்தளவு கேள்வி எழுப்பினேன். தடுமாறினாள். கேள்வி மன்னன் வென்றேன். உணவு ஜீரணம் அடைந்தது. கேள்வி ஜீரணம் அடையவில்லை. நான் ஓய்வெடுக்க முயன்றேன். இரவு உணவு உண்டுவிட்டு உறங்கு என்றாள். உண்டேன். எனக்கான சிஸ்ருசைகளை செய்து, இரவு கடமைக்காக அவளும் உண்டாள். பின் சமயலறையை வட்டம் அடித்து சுத்தப்படுத்தினாள். வட்டம் அடிக்கையில் அவளுக்கு நினைவு வந்ததோ என்னவோ எனக்கு வந்தது நான் ஆக்கிய, வட்டமிட்ட புகை படங்கள். தூக்க மூளையின் மூலையில் இருந்த எண்ணங்கள். தூங்குவதற்குமுன் அம்மாவின் செய்திகளை மறுமுறை யோசித்து பார்த்தேன். தவறை இன்னும் ஆய்வு செய்தேன். தூங்குவதற்கு முன் மூளைக்கு இன்னும் சற்று தீணி போடலாம் என்று. செய்கையில் மனதின் கை தவறி அம்மாவின் அகண்ட கை உடன் உள்ள புகை படம் அகப்பட்டது. சார்ஜர் கண்ணீர்க்கு துளி அளவு கூட தெளிவாக காணவில்லை. அம்மாவின் கைகள் மட்டுமே தெரிந்தது. பெரிதாக செய்தேன். ஒரே எதிரும் புதிருமான கோடுகள். தலை வலித்தது. பெரிதாக்கியதை எடுத்து விட்டேன். சரியான பட அளவு வந்து நின்றது. அந்த கோறமான வரிகளின் வேறு அடிப்பட்டது, அம்மாவின் கைகள். கண்டவுடன் கண் தெளிவு பெற்றது, தூக்க கலக்கம் சற்று கலைந்தது. சார்ஜர் கேபிளின் உள்ள வரிகளில் பாயும் மின்சாரத்தை விட அந்த கைகளில் பாய்ந்த மின்சார வரிகள் இத்தனை வருடங்களில் ஏறாலம் என அறிந்தேன். அம்மாவிடம் கோவத்தை கட்டுப்படுத்த முடிவெடுத்தேன். சொல்ல மனது வரவில்லை. உள்நோக்கத்துடன் கேபிள் புகைப்படங்களை அவள் அனுப்பவில்லை, என்று மனமும் மூலையும் முடிவிற்கு வந்தது.

உதவும் மனம்,
உயிர் உள்ளவரை அதுவே அவள் மனம்.
மூளையிற்கு மின்சாரம், சார்ஜிங் கேபிள் மூலம் பாய்ந்தது போல், உறக்கம்தொடங்கியது...
நன்றி மனதில், தாயான அவளிடம்..

.    .    .

Discus