1. பெருமழை.
நாற்காலிகளுக்கு
ஈரப் பொன்னாடை.
நாணம்
2. புல்லின் நுனியில் பனிமகள்
கதிரவனின் பார்வையில்
வெட்கி மறைந்தாள்.
3. சோகம்
வான மேடையில் போட்டி
தோற்றது மேகம்
பொழிந்தது கண்ணீர் மழை.
4. பசி :
நிலாச்சோறு
சாப்பிட மறுக்கும் மகவு,
பசித்தது முழுமதிக்கு!!!
5. எக்ஸிபிஷன்
விண்மீன்களின்
கண்காட்சியில்
அம்புலியின் பவனி.
6.காணவில்லை
அடைமழை
ஆதவன்,
மேகப் போர்வையில்
பதுங்கினான்.
7. மழலையின் மகிழ்ச்சி !
வீட்டினுள் மாரி வெள்ளம் காகிதக் கப்பல்களின்
அணிவகுப்பு !
8. மழை:
பொழியும் மழை அணைந்துவிட்டன,
லட்சக்கணக்கான நட்சத்திர தீபங்கள்.
9. காதல் :
இதயக்கடல் ஆழம்
காதல் கண்ணீர் கடலில்
மூழ்கியது
10: தேர்தல் :
கட்சிக் கூட்டம்
தலைவர்களின் அறைகூவல்
தொண்டர்களுக்கு பிரியாணி.