பேரானந்தத்தை அள்ளித் தரும் பெண் மகவு இவள் ,
இறைவன் எனக்களித்த இனிய பரிசு இவள் ,
ஆதவனின் அழகிய முதல் காலை கிரணங்கள் இவள்,
கதிரவனின் காலைப் புனல் இவள்,
ஒளிவீசும் நட்சத்திரத்தின் குளிர்ந்த நிழல் இவள் !!!!
வாரி வழங்குகிறாள் வசந்தத்தை இவள்,
மங்கை இனம் மடமை இனம் அல்ல,
ஆரணங்கின் அன்பை அறிவீர்,
இனியவள்தான், ஈரமுடையவள்தான், ஆயினும் இன்னல்களை தீரமுடன் எதிர்ப்பாள்,
வேண்டாம் இனி வனிதைகளை வதைப்பது,
வஞ்சியைப் போற்ற போற்ற
செல்வங்கள் வற்றாது
வீடும் நாடும் உயர்வுறுமே,
கல்லாமையினால் காரிகையர்,
பின்தங்கிடுவர்,
ஆகையினால்
வியப்பூட்டும் சாதனைகளை
விண்கலம் ஏறி
பெண்குலம் புரிய
தக்க கல்வி பெற்றிடுவீர் பூவையரே!!!
சந்திரனிலும் ஏறி சாகசங்கள் செய்வாள் இவள்......
தையல் நல்லாள் இவள்,
சிக்கனமாய் செலவழிக்கும் சுந்தரி இவள் ,
மணாளணுக்கேற்ற மங்கை இவள்,
செல்வத் திருமகள் இவள்,
எதையும் இல்லையென்னாத இல்லாள் இவள்.
போற்றுவோம் நாமும் பெண் எனும் தெய்வத்தை.