Image by Gerd Altmann from Pixabay 

புரிதல்

 புரிந்து கொள்ளுதல் அல்லது அண்டர்ஸ்டாண்டிங் என்பதைப் பற்றி என் கருத்துக்களை சொல்ல விழைகிறேன். யார் யாரை புரிந்துகொள்ளவேண்டும்? புரிதல் என்பதை நாம் எப்படிப் பொருள் கொள்ளலாம்? புரிதலுக்கு ஏதேனும் வரையறை உண்டா? இந்தக் கேள்விகளுக்கு ஒரு பதில் தேடுவதே என்னுடைய நோக்கம்.

பல பெற்றோர் தம் குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொண்டிருப்பார்கள். நண்பர்கள் பலருக்கும் அவர்களுக்கிடையே ஒரு நல்ல தோழமை உணர்வு இருக்கும்.

"நீதான்டா என்ன நல்லா புரிஞ்சு வச்சிருக்கே." என்று ஒருவன் தன் நண்பனிடம் சொல்வதை பலர் கேட்டிருக்கலாம். ஆனால் புரிதல் என்பது ஒருவர் மற்றவருடைய விருப்பமான உணவுகளை பற்றியோ விரும்பி அணியும் ஆடை அணிகலன்கள் பற்றியோ அறிந்து கொள்வது அல்ல. ஒருவர் தனக்கு நெருக்கமானவரின் மன உணர்வுகளை புரிந்து கொள்வதுதான் புரிதல் என்பது. ஒரு கடைக்காரர் தன் வாடிக்கையாளரின் தேவைகளை புரிந்து கொள்வார். அது வியாபாரம். ஒரு வீட்டு உரிமையாளர் தன் வீட்டில் குடியிருக்கும் குடித்தனக்காரருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது என்பது வீட்டு உரிமையாளருக்கும் குடித்தனகாரருக்கும் இடையே இருக்கும் புரிதல் என்பது ஓர் ஒப்பந்தம். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு குருகுலவாசம் செய்த மாணவர்கள் தங்கள் ஆசிரியரின் தேவைகளை அவர்கள் சொல்லாமலேயே பூர்த்தி செய்தனர். ஆசிரியரின் வீட்டு வேலைகள் அனைத்தையும், மாடு மேய்ப்பது, தண்ணீர் இறைப்பது, ஆசிரியரின் வேஷ்டிகளை துவைத்துப் போடுவது, ஆசிரியர் உறங்கும் பொழுது அவருக்கு இதமாக கால்களை பிடித்து விடுவது போன்ற பணிகள் யாவற்றையும் புரிந்துகொண்டு செய்தனர். இந்தப் புரிதல் ஆசிரியரின்பால் மாணாக்கர்கள் கொண்ட பக்தியினால் ஏற்படுவது. ஏகலைவன் குரு துரோணாச்சாரியார் பாண்டவர்களுக்கு வில் வித்தையை பயிற்றுவிக்கும் போது அவர் அறியாமல் தானும் கற்றுக்கொண்டான் என்பதற்காக அவனுடைய கட்டைவிரலை குருதட்சணையாக பெற்றுக்கொண்டார் துரோணர். ஏகலைவனும் சிறிதும் தயக்கமின்றி தன் கட்டைவிரலை காணிக்கையாக அவருக்கு அளித்தான். ஒரு குருபக்தியின் சிறந்த புரிதல் இங்கே மிளிர்கிறது. ஒரு தாய் தன் குழந்தையின் பசியை புரிந்து கொள்வாள் எந்த வயதாக இருந்தாலும். ஆனால் ஒரு தந்தைக்கு அது தெரியாது.

புரிதலின் பல பரிமாணங்களையும் நாம் பார்க்கலாம்.

  1. தம்பதியருக்கு இடையே உள்ள புரிதல்.
  2. ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே உள்ள புரிதல்.
  3. சகோதர சகோதரிகளுக்கு இடையே உள்ள புரிதல்.
  4. மாமியார் மருமகளுக்கு இடையே உள்ள புரிதல்.
  5. மாமனார் மருமகனுக்கு இடையே உள்ள புரிதல்.
  6. எம்பிளாயர் எம்ப்ளாயி, இவர்களுக்கு இடையே உள்ள புரிதல்.
  7. அலுவலகத்தில் வேலை uiபார்க்கும் ஊழியர்களுக்கு இடையே உள்ள புரிதல்.
  8. நண்பர்கள் தோழிகள் இவர்களுக்கு இடையே உள்ள புரிதல்.
  9. வீட்டு எஜமானிக்கும் வேலை செய்யும் பணி பெண்ணுக்கும் இடையே உள்ள புரிதல்.

நாம் முதலில் இரண்டாவதில் இருந்து ஆரம்பிப்போம். ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே உள்ள புரிதல் :

ஒரு ஆசிரியருக்கு தன் மாணவனிடம் நல்லொழுக்கம், நேர்மை, கட்டுப்பாடு போன்ற சிறந்த பண்புகள் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். அதேபோல் மாணவர்கள் ஆசிரியர்களிடம் எதிர்பார்ப்பது என்ன.?

ஆசிரியர் என்பவர் பாடங்களை நன்றாக புரிந்து கொண்டு மாணவர்களுக்கும் புரியும் வகையில் சொல்லி தர வேண்டும் என்பதைத் தான் எதிர்பார்க்கிறார்கள். "அந்த சார் சொல்லுறது புரியவே மாட்டேங்குது " இது அடிக்கடி மாணவர்களுக்கு இடையே நிகழும் டயலாக் . மாணவர்கள் ஆசிரியர்களை எந்த சந்தேகம் எப்போது கேட்டாலும் விளக்கமாக சொல்லி தர வேண்டும். ஆனால் பல ஆசிரியர்கள் மாணவர்களின் சந்தேகங்களை தெளிவு படுத்துவதில்லை. மாறாக, திட்டி அனுப்பி விடுகின்றனர். அதனால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களிடம் கேள்விகள் கேட்பதற்கு பயமும் தயக்கமும் ஏற்பட்டுவிடுகிறது.

அதனாலேயே அவர்கள் இருவருக்கும் இடையே புரிதல் என்பது ஏற்படாமல் போய்விடுகிறது.

சகோதர சகோதரிகளுக்கு இடையே ஏன் புரிதல் ஏற்படுவது இல்லை? தற்காலத்தில் பெற்றோர்களுக்கு ஓரிரு குழந்தைகளே உள்ளனர். ஆனால் முற்காலத்தில் பலர் ஐந்து அல்லது ஆறு குழந்தைகள் பெற்றுக் கொண்டனர். அவர்கள் எல்லோருமே குழந்தைப் பருவத்தில் ஒருவருக்கொருவர் பாசமாகவும் அன்பாகவும் தான் இருந்தனர். ஆனால் அந்த கள்ளமில்லாத அன்பு ஏதோ ஒரு கட்டத்தில், பொருளாதார ஏற்றத்தாழ்வினாலும் அல்லது மற்ற காரணங்களினாலும் மாறுபட தொடங்கியது. அப்பொழுதுதான் புரிதல் என்ற மனப்பான்மையும் சகோதரர்களுக்கு இடையே குறையத் தொடங்கியது. ஏழையான சகோதரனையோ சகோதரியையோ மற்றவர்கள் அலட்சியம் கூட செய்தனர். தற்காலத்தில் கூட இப்படிப்பட்ட நிலை மக்களிடையே இருப்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. எங்கு புரிதல் குறைகிறதோ அங்கு சுயநலப் போக்கு அதிகமாகி விடுகிறது.

மாமியார் மருமகள் பிரச்னை என்பது ஒரு உலகளாவிய பிரச்னை. எந்த மாமியாரும் தன் மருமகளை, எந்த மருமகளும் தன் மாமியாரை புரிந்து கொண்டதாக சரித்திரமே கிடையாது. மாமியாரும் மருமகளும் ஒருவர் மற்றவரை ஒரு மனுஷியாகவே மதிக்க இயலாத போது புரிதல் என்ற பேச்சுக்கு அங்கு இடமேது? அப்படியும் சில விதி விலக்குகள் உண்டு. சுமார் 60 70 வருடங்களுக்கு முன்பு மருமகள்கள் மாமியாருக்கு பயந்து கொண்டுதான் இருந்தனர். அவர்களிடையே புரிதல் இல்லாவிட்டாலும் மாமியார் காலால் இட்ட வேலையை தலையால் மருமகள்கள் செய்துகொண்டிருந்தனர். பெரியவர்கள் சொன்னால் கேட்க வேண்டும். இந்த எண்ணத்திற்கு கட்டுப்பட்டு மருமகள்கள் மாமியார்களுக்கு கீழ்ப்படிந்து நடந்தனர். எல்லா மாமியார்களும் கொடுமைக்காரர்களும் அல்ல. தங்கள் மருமகளை அன்புடனே பலர் நடத்தினர். இதற்கு ஒரு நல்ல காரணம் இருந்தது. மிக இளம் பிராயத்திலேயே திருமணம் நடந்து விடுவதால் மருமகள் தன் மாமியாருக்கு ஒரு மகளாகவே பாவிக்கப்பட்டு வந்தாள்.

ஆனால் மருமகளுக்கும் மாமியாருக்கும் இடையே புரிதல் இருந்ததா இல்லையா என்று பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் மருமகள் மாமியாருக்கு அடங்கி நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பயந்து கொண்டுதான் இருந்தாளே தவிர அவர்களிடையே ஒரு தோழமை பாவம் நிலவவில்லை. பயம் அச்சம் நிலவும் இடத்தில் புரிதல் இருக்காது.

மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையே உள்ள புரிதல் என்பது மிகவும் அரிது. பெண்ணைப் பெற்ற தகப்பன் தன் மருமகனிடம் பேசுவதே இல்லை. மாப்பிள்ளைகளும் அப்படியே. மாமனாரிடம் உரையாடுவதற்கு அவர்களுக்கு எந்த விஷயமும் இல்லை. இங்கே புரிதல் என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஒரு முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையே புரிதல் இருக்குமா ? மிகப்பெரிய தொழிற்சாலைகளிலும் கம்பெனிகளிலும் இது சாத்தியமில்லை. ஆனால் சிறிய அளவு வியாபாரம் செய்யும் முதலாளிகள் சிலர் தங்கள் தொழிலாளிகளின் நலனை கூர்ந்து கவனிப்பது உண்டு. அப்படிப்பட்ட தொழிலாளிகளும் தங்கள் முதலாளிகளிடம் விசுவாசமாகவே இருந்தனர், இருக்கின்றனர். முதலாளிகளின் தேவைகளை அவர்களின் கண்ணசைவிலேயே புரிந்து கொண்டு நிறைவேற்றும் தொழிலாளிகள் பலர் இன்றும் உள்ளனர். குடிசைத் தொழில் மற்றும் சிறிய தொழிற்சாலைகளில் இது சாத்தியமே.

ஓர் அரசாங்க அலுவலகமோ அல்லது ஒரு தனியார் நிறுவனமோ, அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இடையே நல்ல புரிதல் இருந்தால்தான் அந்த அலுவலகம் நன்கு செயல்படும். இதை நன்கு அறிந்து கொண்ட சிலர் தங்கள் அலுவலக சகாக்களுடன் நல்ல நட்பு பேணுவதோடு நல்ல புரிதலை வளர்த்துக் கொள்வார்கள். அலுவலகங்களில் மற்றும் வங்கிகளில் பணிபுரிபவர்கள் ஒருவர் வேலையை மற்றவர் பகிர்ந்து கொள்வதோடு அல்லாமல் தனிப்பட்ட முறையிலும் மற்றவர்க்கு உதவியாக இருப்பார்கள். பள்ளி கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர் ஆசிரியைகளுக்கு இடையே இப்படிப்பட்ட நல்லுறவு நன்கு இருக்கும்.

ஒரு வீட்டு எஜமானிக்கும் அந்த வீட்டு பணிப்பெண்ணிற்கும் இடையே நல்ல புரிதல் இருந்தால் தான் அந்தக் குடும்பத்தினர் அனைவருக்குமே நல்லது. ஏனென்றால் வீட்டு வேலைகளில் பாதியை பணிப்பெண் தான் செய்கிறாள். இங்கே புரிதல் என்பது பணிப்பெண் தாமதமாக வந்தாலும் அடிக்கடி லீவு போட்டாலும் எஜமானி அவளை ஒன்றும் சொல்லக்கூடாது. இது பணிப்பெண்ணின் எதிர்பார்ப்பு. அதேபோல் பணிப்பெண்ணும் எஜமானியின் கோபத்தையும் அவள் தரும் அதிக வேலைகளையும் பொருட்படுத்தாமல் இருக்க பழகிக் கொள்ள வேண்டும். இதுதான் மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங் என்பது. சில வேலைக்காரிகள் ' எஜமானி அம்மா கோபித்துக் கொண்டாலும் நல்லா செய்வாங்க " என்று சர்டிபிகேட் கொடுப்பார்கள். பணிப்பெண்ணை வேலை வாங்குவது என்பது ஒரு கலை. அந்தக் கலையில் பலர் நிபுணர்களாக விளங்குகிறார்கள். மற்ற வீட்டு விஷயங்களை ஒலிபரப்பும் ஆல் இந்தியா ரேடியோவாக பணிப்பெண்கள் விளங்குவதால் தான் சில எஜமானிகளுக்கு பிடித்திருக்கிறது. எஜமானியும் பணிப்பெண்ணும் அடிக்கும் அரட்டையிலேயே அவர்களுடைய புரிதல் நமக்கு விளங்கிவிடும்.

இப்போது கடைசியாக கணவன் மனைவிக்கு இடையே உள்ள புரிதலை பார்ப்போம். இது மிகவும் முக்கியமானது. புரிதல் இல்லாததால் தான் இன்று விவாகரத்துக்கள் பெருகி விட்டன. கணவன் மனைவி என்ற புனிதமான பந்தத்தை தம்பதியர் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். தான் தான் பெரியவன் அல்லது பெரியவள் என்ற ஈகோ அவர்களிடையே தலை விரித்து ஆடுகிறது. "நீ சொல்வதை நான் கேட்பதற்கு நான் ஒன்றும் இளிச்சவாயன் அல்ல " என்று கணவனும் "நீயும் உன் வீட்டாரும் சொல்றபடி எல்லாம் ஆடுவதற்கு நான் ஒன்றும் தலையாட்டி பொம்மை இல்லை" என்று மனைவியும் போர்க்கொடி தூக்குவதால் சிறு சிறு விஷயங்களில் கூட பெரிய பிரச்சனை ஆகி விடுகின்றன. மனைவியை கணவன் அடக்கியாள நினைப்பதும் கணவனை மனைவி டாமினேட் செய்ய நினைப்பதும், இரண்டுமே மிகவும் தவறான செயல்கள். இது விபரீதத்திற்கு தான் அறிகுறி. முதலில் திருமணம் என்பது இரு மனங்களின் சங்கமம் மட்டுமல்ல., அது இரு குடும்பங்களின் சங்கமம். இருபக்க பெற்றோரும் ஒரு நல்ல நேயத்தை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும். இங்கிருந்துதான் புரிதல் என்பது ஆரம்பிக்கிறது. வரதட்சணை சீர்வரிசை போன்ற பல பிரச்சினைகளால் திருமணமான பெண்கள் உயிர் துறக்கவும் நேரிட்டிருக்கிறது. காதல் திருமணங்கள் கூட புரிதல் இல்லாததினால் உடைந்து விடுகின்றன. காதலிக்கும்போது இருந்த புரிதல் திருமணத்திற்கு பிறகு ஏன் இருப்பதில்லை ? பொறுப்புகள் கூடும் பொழுது விட்டுக்கொடுக்கும் தன்மை குறைந்துவிடுகிறது. விட்டுக்கொடுத்தல் என்பதே புரிதலின் ஆரம்பமாகும். நான் ஏன் தழைந்து போக வேண்டும்? என்று ஒரு கணவனும், நான் ஏன் பணிந்து போக வேண்டும் என்று ஒரு மனைவியும் நினைக்கும் போது அங்கு புரிதல் குறைந்து அகம்பாவம் எனும் தூண் நிலைநாட்டப் படுகிறது. நீயா நானா என்ற கேள்வி எழுகிறது.

புரிதல் உள்ள கணவன் மனைவி மற்றவர்களின் கருத்துக்களால் அல்லது பேச்சுக்களால் பாதிக்கப்பட மாட்டார்கள். எந்த நிலையிலும் ஒருவர் மற்றவரை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். ஏதேனும் தவறு நேர்ந்தால் கூட தனிமையிலே அதைப் பற்றி பேசி கணவன் மனைவி இருவரும் சமாதானம் செய்து கொள்வார்கள்.

இதில் இன்னொரு வகையும் உண்டு. தற்காலத்திலும் மிகவும் பழமைவாதிகளாக விளங்கும் சில கணவன்மார்கள் மனைவியின் மீது ஆதிக்கம் செலுத்தவே விரும்புகின்றனர். இது மிகவும் வருந்தத்தக்கது. மனைவியின் ஒவ்வொரு செயலையும் தடை செய்து அவளை முன்னேற விடாமல் தடுக்கின்றனர். "உனக்கு ஒன்றும் தெரியாது நீ சும்மா இரு " என்று சொல்லும் பல ஆண்களை நாம் பார்க்கிறோம். பல ஆண்கள் வீட்டு விஷயங்களை தன் மனைவியுடன் கலந்து ஆலோசிப்பது இல்லை. நான் அறிந்த பல பெண்கள் "அவர் நான் சொல்வதை கேட்கவே மாட்டார் " என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். இது எதனால்? ஆணாதிக்கம் மற்றும் பெண்களுக்கு சுய சிந்தனை இருக்கக் கூடாது என்று எண்ணுவதும் தான்.

ஆனால் தற்போதைய நூதன வாழ்க்கை சூழலில் பிரச்சினைகளை எதிர்கொள்வது பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தான். திருமணத்திற்கு பெண்கள் இடும் கண்டிஷன்கள் ஏராளம். முற்காலத்தைப்போல் திருமணம் ஆனதும் பெண்கள் வேலையை விட்டு விடுவதோ அல்லது கணவனுடைய ஊருக்கு மாற்றிக் கொள்வதோ இல்லை. கணவன் நான் இருக்கும் ஊருக்கு வரலாமே என்று பெண்கள் நினைக்கத் தொடங்கி விட்டனர். இதில் தவறு ஏதுமில்லை. மேலும் பெண்கள் தங்கள் பெற்றோரையும் தங்களுடன் வைத்துக் கொள்ள விரும்புகின்றனர். கணவன் மனைவிக்கிடையே மிக நல்ல புரிதல் இருந்தால் ஒழிய இவைகள் சாத்தியமில்லை. நல்ல புரிந்துணர்வு இருந்தால் மட்டுமே பெண்ணைப் பெற்றவர்கள் தங்கள் பெண் மருமகனுடன் இருக்கமுடியும். மாமியார் மாமனாரை விரோதி போல் பார்க்கும் மருமகனுடன் எவ்வாறு தங்க முடியும் ?

இப்படிப்பட்ட மனப்பான்மை ஆண்களிடம் இருப்பதால்தான் பெண்களும் தங்கள் மாமியார் மாமனாரை மதிப்பதில்லை.

புரிதல் : புரிந்து கொள்ளுதல் அல்லது அண்டர்ஸ்டாண்டிங் என்பதைப் பற்றி என் கருத்துக்களை சொல்ல விழைகிறேன். யார் யாரை புரிந்துகொள்ளவேண்டும்? புரிதல் என்பதை நாம் எப்படிப் பொருள் கொள்ளலாம்? புரிதலுக்கு ஏதேனும் வரையறை உண்டா? இந்தக் கேள்விகளுக்கு ஒரு பதில் தேடுவதே என்னுடைய நோக்கம்.

பல பெற்றோர் தம் குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொண்டிருப்பார்கள். நண்பர்கள் பலருக்கும் அவர்களுக்கிடையே ஒரு நல்ல தோழமை உணர்வு இருக்கும்.

"நீதான்டா என்ன நல்லா புரிஞ்சு வச்சிருக்கே." என்று ஒருவன் தன் நண்பனிடம் சொல்வதை பலர் கேட்டிருக்கலாம். ஆனால் புரிதல் என்பது ஒருவர் மற்றவருடைய விருப்பமான உணவுகளை பற்றியோ விரும்பி அணியும் ஆடை அணிகலன்கள் பற்றியோ அறிந்து கொள்வது அல்ல. ஒருவர் தனக்கு நெருக்கமானவரின் மன உணர்வுகளை புரிந்து கொள்வதுதான் புரிதல் என்பது. ஒரு கடைக்காரர் தன் வாடிக்கையாளரின் தேவைகளை புரிந்து கொள்வார். அது வியாபாரம். ஒரு வீட்டு உரிமையாளர் தன் வீட்டில் குடியிருக்கும் குடித்தனக்காரருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது என்பது வீட்டு உரிமையாளருக்கும் குடித்தனகாரருக்கும் இடையே இருக்கும் புரிதல் என்பது ஓர் ஒப்பந்தம். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு குருகுலவாசம் செய்த மாணவர்கள் தங்கள் ஆசிரியரின் தேவைகளை அவர்கள் சொல்லாமலேயே பூர்த்தி செய்தனர். ஆசிரியரின் வீட்டு வேலைகள் அனைத்தையும், மாடு மேய்ப்பது, தண்ணீர் இறைப்பது, ஆசிரியரின் வேஷ்டிகளை துவைத்துப் போடுவது, ஆசிரியர் உறங்கும் பொழுது அவருக்கு இதமாக கால்களை பிடித்து விடுவது போன்ற பணிகள் யாவற்றையும் புரிந்துகொண்டு செய்தனர். இந்தப் புரிதல் ஆசிரியரின்பால் மாணாக்கர்கள் கொண்ட பக்தியினால் ஏற்படுவது. ஏகலைவன் குரு துரோணாச்சாரியார் பாண்டவர்களுக்கு வில் வித்தையை பயிற்றுவிக்கும் போது அவர் அறியாமல் தானும் கற்றுக்கொண்டான் என்பதற்காக அவனுடைய கட்டைவிரலை குருதட்சணையாக பெற்றுக்கொண்டார் துரோணர். ஏகலைவனும் சிறிதும் தயக்கமின்றி தன் கட்டைவிரலை காணிக்கையாக அவருக்கு அளித்தான். ஒரு குருபக்தியின் சிறந்த புரிதல் இங்கே மிளிர்கிறது. ஒரு தாய் தன் குழந்தையின் பசியை புரிந்து கொள்வாள் எந்த வயதாக இருந்தாலும். ஆனால் ஒரு தந்தைக்கு அது தெரியாது.

புரிதலின் பல பரிமாணங்களையும் நாம் பார்க்கலாம்.

  1. தம்பதியருக்கு இடையே உள்ள புரிதல்.
  2. ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே உள்ள புரிதல்.
  3. சகோதர சகோதரிகளுக்கு இடையே உள்ள புரிதல்.
  4. மாமியார் மருமகளுக்கு இடையே உள்ள புரிதல்.
  5. மாமனார் மருமகனுக்கு இடையே உள்ள புரிதல்.
  6. எம்பிளாயர் எம்ப்ளாயி, இவர்களுக்கு இடையே உள்ள புரிதல்.
  7. அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு இடையே உள்ள புரிதல்.
  8. நண்பர்கள் தோழிகள் இவர்களுக்கு இடையே உள்ள புரிதல்.
  9. வீட்டு எஜமானிக்கும் வேலை செய்யும் பணி பெண்ணுக்கும் இடையே உள்ள புரிதல்.

நாம் முதலில் இரண்டாவதில் இருந்து ஆரம்பிப்போம். ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே உள்ள புரிதல் :

ஒரு ஆசிரியருக்கு தன் மாணவனிடம் நல்லொழுக்கம், நேர்மை, கட்டுப்பாடு போன்ற சிறந்த பண்புகள் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். அதேபோல் மாணவர்கள் ஆசிரியர்களிடம் எதிர்பார்ப்பது என்ன.?

ஆசிரியர் என்பவர் பாடங்களை நன்றாக புரிந்து கொண்டு மாணவர்களுக்கும் புரியும் வகையில் சொல்லி தர வேண்டும் என்பதைத் தான் எதிர்பார்க்கிறார்கள். "அந்த சார் சொல்லுறது புரியவே மாட்டேங்குது " இது அடிக்கடி மாணவர்களுக்கு இடையே நிகழும் டயலாக் . மாணவர்கள் ஆசிரியர்களை எந்த சந்தேகம் எப்போது கேட்டாலும் விளக்கமாக சொல்லி தர வேண்டும். ஆனால் பல ஆசிரியர்கள் மாணவர்களின் சந்தேகங்களை தெளிவு படுத்துவதில்லை. மாறாக, திட்டி அனுப்பி விடுகின்றனர். அதனால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களிடம் கேள்விகள் கேட்பதற்கு பயமும் தயக்கமும் ஏற்பட்டுவிடுகிறது.

அதனாலேயே அவர்கள் இருவருக்கும் இடையே புரிதல் என்பது ஏற்படாமல் போய்விடுகிறது.

சகோதர சகோதரிகளுக்கு இடையே ஏன் புரிதல் ஏற்படுவது இல்லை? தற்காலத்தில் பெற்றோர்களுக்கு ஓரிரு குழந்தைகளே உள்ளனர். ஆனால் முற்காலத்தில் பலர் ஐந்து அல்லது ஆறு குழந்தைகள் பெற்றுக் கொண்டனர். அவர்கள் எல்லோருமே குழந்தைப் பருவத்தில் ஒருவருக்கொருவர் பாசமாகவும் அன்பாகவும் தான் இருந்தனர். ஆனால் அந்த கள்ளமில்லாத அன்பு ஏதோ ஒரு கட்டத்தில், பொருளாதார ஏற்றத்தாழ்வினாலும் அல்லது மற்ற காரணங்களினாலும் மாறுபட தொடங்கியது. அப்பொழுதுதான் புரிதல் என்ற மனப்பான்மையும் சகோதரர்களுக்கு இடையே குறையத் தொடங்கியது. ஏழையான சகோதரனையோ சகோதரியையோ மற்றவர்கள் அலட்சியம் கூட செய்தனர். தற்காலத்தில் கூட இப்படிப்பட்ட நிலை மக்களிடையே இருப்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. எங்கு புரிதல் குறைகிறதோ அங்கு சுயநலப் போக்கு அதிகமாகி விடுகிறது.

மாமியார் மருமகள் பிரச்னை என்பது ஒரு உலகளாவிய பிரச்னை. எந்த மாமியாரும் தன் மருமகளை, எந்த மருமகளும் தன் மாமியாரை புரிந்து கொண்டதாக சரித்திரமே கிடையாது. மாமியாரும் மருமகளும் ஒருவர் மற்றவரை ஒரு மனுஷியாகவே மதிக்க இயலாத போது புரிதல் என்ற பேச்சுக்கு அங்கு இடமேது? அப்படியும் சில விதி விலக்குகள் உண்டு. சுமார் 60 70 வருடங்களுக்கு முன்பு மருமகள்கள் மாமியாருக்கு பயந்து கொண்டுதான் இருந்தனர். அவர்களிடையே புரிதல் இல்லாவிட்டாலும் மாமியார் காலால் இட்ட வேலையை தலையால் மருமகள்கள் செய்துகொண்டிருந்தனர். பெரியவர்கள் சொன்னால் கேட்க வேண்டும். இந்த எண்ணத்திற்கு கட்டுப்பட்டு மருமகள்கள் மாமியார்களுக்கு கீழ்ப்படிந்து நடந்தனர். எல்லா மாமியார்களும் கொடுமைக்காரர்களும் அல்ல. தங்கள் மருமகளை அன்புடனே பலர் நடத்தினர். இதற்கு ஒரு நல்ல காரணம் இருந்தது. மிக இளம் பிராயத்திலேயே திருமணம் நடந்து விடுவதால் மருமகள் தன் மாமியாருக்கு ஒரு மகளாகவே பாவிக்கப்பட்டு வந்தாள்.

ஆனால் மருமகளுக்கும் மாமியாருக்கும் இடையே புரிதல் இருந்ததா இல்லையா என்று பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் மருமகள் மாமியாருக்கு அடங்கி நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பயந்து கொண்டுதான் இருந்தாளே தவிர அவர்களிடையே ஒரு தோழமை பாவம் நிலவவில்லை. பயம் அச்சம் நிலவும் இடத்தில் புரிதல் இருக்காது.

மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையே உள்ள புரிதல் என்பது மிகவும் அரிது. பெண்ணைப் பெற்ற தகப்பன் தன் மருமகனிடம் பேசுவதே இல்லை. மாப்பிள்ளைகளும் அப்படியே. மாமனாரிடம் உரையாடுவதற்கு அவர்களுக்கு எந்த விஷயமும் இல்லை. இங்கே புரிதல் என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஒரு முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையே புரிதல் இருக்குமா ? மிகப்பெரிய தொழிற்சாலைகளிலும் கம்பெனிகளிலும் இது சாத்தியமில்லை. ஆனால் சிறிய அளவு வியாபாரம் செய்யும் முதலாளிகள் சிலர் தங்கள் தொழிலாளிகளின் நலனை கூர்ந்து கவனிப்பது உண்டு. அப்படிப்பட்ட தொழிலாளிகளும் தங்கள் முதலாளிகளிடம் விசுவாசமாகவே இருந்தனர், இருக்கின்றனர். முதலாளிகளின் தேவைகளை அவர்களின் கண்ணசைவிலேயே புரிந்து கொண்டு நிறைவேற்றும் தொழிலாளிகள் பலர் இன்றும் உள்ளனர். குடிசைத் தொழில் மற்றும் சிறிய தொழிற்சாலைகளில் இது சாத்தியமே.

ஓர் அரசாங்க அலுவலகமோ அல்லது ஒரு தனியார் நிறுவனமோ, அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இடையே நல்ல புரிதல் இருந்தால்தான் அந்த அலுவலகம் நன்கு செயல்படும். இதை நன்கு அறிந்து கொண்ட சிலர் தங்கள் அலுவலக சகாக்களுடன் நல்ல நட்பு பேணுவதோடு நல்ல புரிதலை வளர்த்துக் கொள்வார்கள். அலுவலகங்களில் மற்றும் வங்கிகளில் பணிபுரிபவர்கள் ஒருவர் வேலையை மற்றவர் பகிர்ந்து கொள்வதோடு அல்லாமல் தனிப்பட்ட முறையிலும் மற்றவர்க்கு உதவியாக இருப்பார்கள். பள்ளி கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர் ஆசிரியைகளுக்கு இடையே இப்படிப்பட்ட நல்லுறவு நன்கு இருக்கும்.

ஒரு வீட்டு எஜமானிக்கும் அந்த வீட்டு பணிப்பெண்ணிற்கும் இடையே நல்ல புரிதல் இருந்தால் தான் அந்தக் குடும்பத்தினர் அனைவருக்குமே நல்லது. ஏனென்றால் வீட்டு வேலைகளில் பாதியை பணிப்பெண் தான் செய்கிறாள். இங்கே புரிதல் என்பது பணிப்பெண் தாமதமாக வந்தாலும் அடிக்கடி லீவு போட்டாலும் எஜமானி அவளை ஒன்றும் சொல்லக்கூடாது. இது பணிப்பெண்ணின் எதிர்பார்ப்பு. அதேபோல் பணிப்பெண்ணும் எஜமானியின் கோபத்தையும் அவள் தரும் அதிக வேலைகளையும் பொருட்படுத்தாமல் இருக்க பழகிக் கொள்ள வேண்டும். இதுதான் மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங் என்பது. சில வேலைக்காரிகள் ' எஜமானி அம்மா கோபித்துக் கொண்டாலும் நல்லா செய்வாங்க " என்று சர்டிபிகேட் கொடுப்பார்கள். பணிப்பெண்ணை வேலை வாங்குவது என்பது ஒரு கலை. அந்தக் கலையில் பலர் நிபுணர்களாக விளங்குகிறார்கள். மற்ற வீட்டு விஷயங்களை ஒலிபரப்பும் ஆல் இந்தியா ரேடியோவாக பணிப்பெண்கள் விளங்குவதால் தான் சில எஜமானிகளுக்கு பிடித்திருக்கிறது. எஜமானியும் பணிப்பெண்ணும் அடிக்கும் அரட்டையிலேயே அவர்களுடைய புரிதல் நமக்கு விளங்கிவிடும்.

இப்போது கடைசியாக கணவன் மனைவிக்கு இடையே உள்ள புரிதலை பார்ப்போம். இது மிகவும் முக்கியமானது. புரிதல் இல்லாததால் தான் இன்று விவாகரத்துக்கள் பெருகி விட்டன. கணவன் மனைவி என்ற புனிதமான பந்தத்தை தம்பதியர் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். தான் தான் பெரியவன் அல்லது பெரியவள் என்ற ஈகோ அவர்களிடையே தலை விரித்து ஆடுகிறது. "நீ சொல்வதை நான் கேட்பதற்கு நான் ஒன்றும் இளிச்சவாயன் அல்ல " என்று கணவனும் "நீயும் உன் வீட்டாரும் சொல்றபடி எல்லாம் ஆடுவதற்கு நான் ஒன்றும் தலையாட்டி பொம்மை இல்லை" என்று மனைவியும் போர்க்கொடி தூக்குவதால் சிறு சிறு விஷயங்களில் கூட பெரிய பிரச்சனை ஆகி விடுகின்றன. மனைவியை கணவன் அடக்கியாள நினைப்பதும் கணவனை மனைவி டாமினேட் செய்ய நினைப்பதும், இரண்டுமே மிகவும் தவறான செயல்கள். இது விபரீதத்திற்கு தான் அறிகுறி. முதலில் திருமணம் என்பது இரு மனங்களின் சங்கமம் மட்டுமல்ல., அது இரு குடும்பங்களின் சங்கமம். இருபக்க பெற்றோரும் ஒரு நல்ல நேயத்தை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும். இங்கிருந்துதான் புரிதல் என்பது ஆரம்பிக்கிறது. வரதட்சணை சீர்வரிசை போன்ற பல பிரச்சினைகளால் திருமணமான பெண்கள் உயிர் துறக்கவும் நேரிட்டிருக்கிறது. காதல் திருமணங்கள் கூட புரிதல் இல்லாததினால் உடைந்து விடுகின்றன. காதலிக்கும்போது இருந்த புரிதல் திருமணத்திற்கு பிறகு ஏன் இருப்பதில்லை ? பொறுப்புகள் கூடும் பொழுது விட்டுக்கொடுக்கும் தன்மை குறைந்துவிடுகிறது. விட்டுக்கொடுத்தல் என்பதே புரிதலின் ஆரம்பமாகும். நான் ஏன் தழைந்து போக வேண்டும்? என்று ஒரு கணவனும், நான் ஏன் பணிந்து போக வேண்டும் என்று ஒரு மனைவியும் நினைக்கும் போது அங்கு புரிதல் குறைந்து அகம்பாவம் எனும் தூண் நிலைநாட்டப் படுகிறது. நீயா நானா என்ற கேள்வி எழுகிறது.

புரிதல் உள்ள கணவன் மனைவி மற்றவர்களின் கருத்துக்களால் அல்லது பேச்சுக்களால் பாதிக்கப்பட மாட்டார்கள். எந்த நிலையிலும் ஒருவர் மற்றவரை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். ஏதேனும் தவறு நேர்ந்தால் கூட தனிமையிலே அதைப் பற்றி பேசி கணவன் மனைவி இருவரும் சமாதானம் செய்து கொள்வார்கள்.

இதில் இன்னொரு வகையும் உண்டு. தற்காலத்திலும் மிகவும் பழமைவாதிகளாக விளங்கும் சில கணவன்மார்கள் மனைவியின் மீது ஆதிக்கம் செலுத்தவே விரும்புகின்றனர். இது மிகவும் வருந்தத்தக்கது. மனைவியின் ஒவ்வொரு செயலையும் தடை செய்து அவளை முன்னேற விடாமல் தடுக்கின்றனர். "உனக்கு ஒன்றும் தெரியாது நீ சும்மா இரு " என்று சொல்லும் பல ஆண்களை நாம் பார்க்கிறோம். பல ஆண்கள் வீட்டு விஷயங்களை தன் மனைவியுடன் கலந்து ஆலோசிப்பது இல்லை. நான் அறிந்த பல பெண்கள் "அவர் நான் சொல்வதை கேட்கவே மாட்டார் " என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். இது எதனால்? ஆணாதிக்கம் மற்றும் பெண்களுக்கு சுய சிந்தனை இருக்கக் கூடாது என்று எண்ணுவதும் தான்.

ஆனால் தற்போதைய நூதன வாழ்க்கை சூழலில் பிரச்சினைகளை எதிர்கொள்வது பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தான். திருமணத்திற்கு பெண்கள் இடும் கண்டிஷன்கள் ஏராளம். முற்காலத்தைப்போல் திருமணம் ஆனதும் பெண்கள் வேலையை விட்டு விடுவதோ அல்லது கணவனுடைய ஊருக்கு மாற்றிக் கொள்வதோ இல்லை. கணவன் நான் இருக்கும் ஊருக்கு வரலாமே என்று பெண்கள் நினைக்கத் தொடங்கி விட்டனர். இதில் தவறு ஏதுமில்லை. மேலும் பெண்கள் தங்கள் பெற்றோரையும் தங்களுடன் வைத்துக் கொள்ள விரும்புகின்றனர். கணவன் மனைவிக்கிடையே மிக நல்ல புரிதல் இருந்தால் ஒழிய இவைகள் சாத்தியமில்லை. நல்ல புரிந்துணர்வு இருந்தால் மட்டுமே பெண்ணைப் பெற்றவர்கள் தங்கள் பெண் மருமகனுடன் இருக்கமுடியும். மாமியார் மாமனாரை விரோதி போல் பார்க்கும் மருமகனுடன் எவ்வாறு தங்க முடியும் ?

இப்படிப்பட்ட மனப்பான்மை ஆண்களிடம் இருப்பதால்தான் பெண்களும் தங்கள் மாமியார் மாமனாரை மதிப்பதில்லை.

பெரியோர்களும்   "அந்தக்காலத்தில் நாங்க பெரியவங்க சொல்றத கேட்டோம் " என்ற பேச்சுக்கு அடிக்கடி இடம் கொடுக்கக்கூடாது. ஒவ்வொரு குடும்பச் சூழலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். கணவனும் மனைவியும் இணைந்து தன் குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டும் . முக்கியமாக குழந்தைகள் பிறந்த பிறகு சண்டையிடுவதோ பிரிந்து செல்வதோ கூடவே கூடாது. ஒரு கணவன் மனைவி குழந்தைகளுக்கு நல்ல உதாரணமாக இருக்காமல் போகலாம். ஆனால் ஒரு கெட்ட உதாரணமாக இருந்துவிடக்கூடாது. வாழ்க்கை என்பது கையில் ஊசியை வைத்துக் கொண்டு கண்ணை மூடிக்கொண்டு நடப்பதுபோல் ஆகும். ஊசி நம் கையையும் குத்தலாம் அல்லது எதிரில் வருபவரையும் பதம் பார்க்கலாம். ஒருவரின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் தான் அந்த ஊசி. எந்த சமயத்திலும் பொறுமையும் நிதானமும் வாழ்க்கையின் ஆணிவேர் ஆகும். கணவன் மனைவி இருவருமே ஒருவர் கோபப்படும் போது மற்றவர் சும்மா இருந்துவிட வேண்டும். அதுவே பாதி பிரச்சினைகளைத் தீர்த்து விடும். புரிதலில் மிக முக்கியமான பாயிண்ட் இதுதான். மௌனம் என்பது நம் தாய்க்கு சமானம். அன்னை எனப்படுபவள் பிரச்சினைகளை மிகவும் சாதுரியமாக கையாளுவார். பல நேரங்களில் மௌனமாக இருப்பது பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக அமைந்து விடும். புரிதல் உள்ளவர்கள் அனாவசியமாக பேசமாட்டார்கள். ஆனால் பேச வேண்டிய விஷயங்களை பேசியும் சொல்ல வேண்டியவைகளை சொல்லியும் தான் நமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும். பேசுவது ஆபத்து என்றால் பேச வேண்டிய சமயத்தில் பேசாமல் இருப்பது பேராபத்து.

இதுவே புரிதலின் மிக முக்கிய அங்கமாகும். புரிதல் என்ற இந்தக் கட்டுரையில் எனக்குச் சரி என்று தோன்றிய கருத்துக்களை கூறியுள்ளேன். மாற்றுக் கருத்து உள்ளவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

.    .    .

Discus