Source: Andreas Wohlfahrt from Pixabay 

அப்பா இன்றையோட மூனு மாசம் ஆகுது. அவரும் நானும் சந்திச்சு. இனி எல்லாம் முடிஞ்சிடுச்சுப்பா. அவருக்கு என் மேல எந்த அபிப்பிராயமும் இல்லை‌. பேசாமல் நீங்க இதைப் பற்றி எதுவும் பேசாமல் இருப்பது நல்லது ப்பா என்று தொடங்கியது அவளின் பேச்சு அன்று அதிகாலையிலையே‌.

அம்மா காதம்பரி நல்லா யோசிச்சு தான் பேசுறீயா? உனக்கு இருக்க குறை தெரிந்தும் அவராகவே முன் வந்து கல்யாணம் செஞ்சுக்கிட்ட மனுஷன்ம்மா. அவரைப் போய் வேண்டாம்னு சொல்றது ரொம்ப கஷ்டமா இருக்கு. அப்பா தயவு செய்து இனி அவரைப் பற்றி என்னிடம் பேசவே பேசாதீங்க அவள் கண்கள் கலங்கியவாறு தன் அறைக்குள் நுழைந்தாள்.

“சித்தரம் பேசுதடீ அடி பெண்ணே உன் கோலம் மொழி உதடு..!" அவன் அந்த உதட்டை இழுத்து அவளின் உமிழ்நீரை பருகிட உறிந்தான் அவளின் இதழை‌. அவள் சட்டென்று கிடைத்த அந்த ஆழ்ந்த முத்தத்தை எதிர்ப்பார்க்கவில்லை திணறிப் போனாள்.

மூச்சி முட்டி இன்பம் களித்து. தன்னிலை மறந்து போர்வைக்குள் போர்வையாய் அவனிருக்க நாணத்துடன் அவன் கல்நெஞ்சில் கல்வெட்டாய் ஒட்டிக் கொண்டாள்.

அன்று தான் தொடங்கியது அவர்களது முதல் தேடல். காதலின் காமத்தின் முதல் அத்யாயம். இருவரின் வாழ்க்கையும் மிகவும் வித்யாசமானது தான்.

காதம்பரிக்கு குழந்தைங்கள் என்றாள் மிகவும் பிடிக்கும். ஆனால் அவளின் குறை கருப்பையில் சினைக்கட்டி ஏற்ப்பட்டு கருப்பையை நீக்கிவிட்டனர். அது திருமணத்திற்கு முன்பே நடந்தேறிவிட்டது. இந்த குறையை முதலில் சொல்லிய பிறகு தான் பெண்ப்பார்ப்பு படலமே நடந்தது.

என் பையன்னு சொல்லவில்லைங்க, தம்பி ரொம்ப பொறுப்பானவன். எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது. ஆனால் அவனுக்கு அடிக்கடி அதிகமாய் கோபம் வரும் அந்த தயக்கத்தில் பாதி உண்மையே வெளி வந்திருந்தது.

அதனால என்னங்க கோபம் வரும் இடத்தில் தானே குணமிருக்கும். அதான் பாருங்க என் பொண்ணுக்கு இப்படி ஒரு குறை இருக்குன்னு தெரிந்துப் பின்னரும் கல்யாணம் பண்ணீக்க வந்திருக்காரு. 

அதென்னவோ வாஸ்தவம் தான்ங்க. எங்க குடும்பத்துக்கு அடுத்த வாரிசு வேணும் இது மாதிரி குறையுள்ள பெண் வேணாம்னு என் மனைவி சண்டையேப் போட்டுட்டாள் அவனிடம். ஆனால் அவன் கட்டினால் உங்க பொண்ண தான் கட்டுவேன்னு ஒற்றை காலில்‌ நிக்குறான்” குத்திக் காட்டும் பேச்சுடன் சபையை நிறைத்தார் ராகவனின் தந்தை அம்பலவாணன்.

"என்ன சொல்றீங்க சம்பந்தி ஓ அதன் காரணமாக தான் அவங்க இப்ப வரலையா?"

"ஆமாம்" என்றார்.

இதை கேட்டதும் நயணவாணன் சோகமாகினார்.

“அப்பா.. அப்பா.. ”உள்ளிருந்து கிசுகிசு குரலில் அழைத்தாள் காதம்பரி.

அவரும் அவள் என்ன சொல்லுவாள் என்று அறிந்து தயக்கத்துடன் சென்றார்.

"அப்பா அவருக்கு என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாரு. எனக்கும் பிடிச்சிருக்கு. கல்யாணத்தை ஏற்பாடு செய்யுங்கள். அவரோட அம்மாவை நான் போய் என் அன்பால் மாத்திக்கிறேன்". இப்படி காதம்பரி சொல்வாள் என்று எதிர்ப்பார்க்கதவர் ‌வானத்திற்கும் பூமிக்குமாய் குதித்தார்.

திருமணம் அழகாய் நடந்தேறி அந்த வீட்டில் மூன்று மாதங்கள் கூட முழுமையாக வாழதவள் மீண்டும் பிறந்தகம்‌ வந்துவிட்டாள்.

அதற்கு என்ன தான் காரணம்? என்று அவரும் பலமுறை கேட்டுவிட்டார். அவளால் அந்த உண்மையை மட்டும் சொல்லவே முடியவில்லை. 

சரிம்மா அப்போ அவருக்கு விவாகரத்தாச்சும் கொடுத்துடு. அவராச்சும் வேற பெண்ணை கல்யாணம் செய்துக் கொண்டு நலமோடு வாழட்டும் இது இந்த மூன்று மாதத்தில் நயணவானின் பேச்சாக இருந்தது. 

அப்பா நான் அதை மட்டும் செய்யவே  மாட்டேன். அவராகவே திருந்த வேண்டும். இல்லையென்றால் நான் திருத்துவேன்ப்பா. அவரோட நான் வாழனும்ப்பா என்றவளிடம் பேச விரும்பாதவர், தன் மாப்பிள்ளை ராகவனை சந்திக்கச் சென்றார்.

தம்பி அவ ஏன் கோச்சிக்கிட்டு வந்தான்னு எனக்கு தெரியலைப்பா. அவளும் சொல்லவில்லை. ஆனால் குடும்பம்னா கணவன் மனைவிக்குள்ள ஆயிரம் சண்டை வரும் ஒருத்தரை ஒருத்தர் அனுசரித்து வாழ்ந்தால் தான் குடும்பம் சிறக்கும்.

புரியுது மாமா. உண்மையில் தவறு‌ என் மேல தான். நான் தான் அவளை சரியா புரிஞ்சிக்கல.

என்ன சொல்றீங்க மாப்பிள்ளை. அவளுக்கு என்னைப் பிடிக்கும்ன்னு தெரிந்தும் அவ கிட்ட நான் அப்படி கேட்டு இருக்க கூடாது. அதோட விளைவு தான் இது. எனக்கு குழந்தை மேல அப்படி ஒன்னும் ஆசையில்லை. ஆனால் என்னோட அம்மாக்கு எங்க குடும்பத்துக்கு என் மூலமா ஒரு வாரிசு வேணும்னு  ஆசை.

ஓ உங்களை வேற கல்யாணம் பண்ணிக்க சொன்னாங்களா நடுவில் குறிக்கிட்டார் அவர்.

உண்மை தான் மாமா. அவங்க எனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்க தான் நினைச்சாங்க. ஒரு தாயோட மனநிலை அது. அதை என்னால் குற்றம் சொல்ல முடியாது. அவங்க கிட்ட நான் பதிலுக்கு சொன்னது அம்மா எனக்கு அக்காவோ தங்கையோ இதுப் போன்ற குறையோடு இருந்து அவளை திருமணம் செய்துக் கொண்டவர் வாரிசுக்காக வேறொரு கல்யாணம் செய்துக் கொண்டால் நீ தாங்குவீயான்னு கேட்டேன். அதோடு எனக்கு இருக்கும் அந்த குறையையும் மறந்துடாதம்மா அதை சொன்னவுடன் நயணவானனின் முகம் மாறியது‌. உங்களிடம் குறையா? என்ன மாப்பிள்ளை சொல்றீங்க. ஆமாம் மாமா எனக்குள்ள ஒரு குறை இருக்க‌. எனக்கு அடிக்கடி கோபம் வரும். அந்த கோபத்தில் யாரையாவது காய்ப்படுத்திடுவேன். இதை கல்யாணத்திற்கு முன்பே உங்க மகளிடம் சொல்லிட்டேன். அவளும் என்னை ஏற்றுக் கொண்டாள்.

நாங்க ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு தான் திருமணம் செய்துக் கொண்டோம்.

என் அம்மாவோட ஆசைக்காக வேறொரு கல்யாணம் பண்ணீக்க நினைக்கவில்லை நான். அதுக்கு பதிலாக வேறு வழியை யோசித்தேன். அதற்க்காக மருத்துவரை சந்தித்து வழிக்கேட்டேன். அதற்கு மருத்துவர் அளித்த அறிவுரை தான் வாடகை தாய் மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்வது‌. நானும் அதற்கு சம்மதித்தேன். 

என் அம்மாவிடம் அவங்க நச்சரிப்பு தாங்க முடியாமல் இந்த உண்மையை சொன்னேன்‌. காதம்பரியிடம் மறைத்து வைத்திருந்தேன்‌. அதற்கும் காரணம் உண்டு. அவ அந்த குழந்தையை தன்னோட குழந்தையாய் எண்ணி தூக்கி கொஞ்சும் அந்த நொடியின் மகிழ்ச்சியை காண நினைத்தேன் மாமா.

.க்ஷகாதம்பரியிடம் கேட்காமல் நான் அப்படி ஒரு முடிவெடுத்தது தப்பு தான். ஆனால் அவளுக்கு தெரியாமல் இந்த சிகிச்சை நடந்து குழந்தைப் பிறந்ததும் சொல்லலாம்னு இருந்தேன்.

அதற்குள் என் அம்மா வீட்ல நடந்த சின்ன  சண்டையில் "இந்த வீட்டுக்கு வாரிசு வரப்போகிறது. அது வந்ததும் உன்னை விரட்டிடும்ன்னு" சொல்லி அவளோட மனதை காயப்படுத்தீட்டாங்க.

ஆனால் மாப்பிள்ளை இதைப் பற்றி நீங்கள் அவளிடம் பேசி இருக்கலமாமே. பேசி இருக்கலாம் தான் மாமா. அதை காதுக் கொடுத்துக் கேட்க தான் உங்க மகளுக்கு பொறுமையே இல்லையே‌.

நான் தான் ஏதோ தவறு செய்து பிள்ளை பெற்றுக் கொண்டு வேறு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறாள்.

சரிங்க மாப்பிள்ளை இதைப் பற்றி நானே காதம்பரியிடம் பேசுகிறேன். 

வேண்டாம் மாமா. நானே அவளிடம் பேசீனால் தான் சரியாக வரும். அதற்கு இன்னும் ஒரு ஏழு மாதங்கள் ஆகும். அந்த குழந்தையை அவளிடம் கொடுத்து இது உன் குழந்தை நம்ப குழந்தைன்னு சொல்லி அவளை சந்தோஷப்படுத்தனும். அதுவரைக்கும் அவள் என் மேல எவ்வளவு கோபமாய் வேண்டுமானாலும் இருக்கட்டும்.

நீங்களும் இதையெல்லாம் அவளிடம் சொல்லீடாதீங்க மாமா. அவனது அன்பான வேண்டுதலுக்கு இணங்க பொறுமையாக இருந்தார் நயணவாணன். 

நாளுக்கு நாள் இருவருக்கும் உள்ள இடைவேளி அதிகமானது. அவளுக்கு அவனின்றி வாழ்தல் பழகினாலும் ஏதோ பறிக்கொடுத்த உணர்வாய் இருந்தது. அவனும் அவள் அந்த ஒரு நொடி அடையப் போகும் மகிழ்ச்சிக்காக தன்னை கஷ்டப்படுத்திக் கொண்டான்.

சரியாக ஏழு மாதங்கள் உருண்டோடியது அவள் எதிர்ப்பார்த்திருந்த அந்த நாளும் வந்தது. 

அதற்குள் காதம்பரி அந்த தவறான முடிவை கையில் எடுத்தாள்.

அம்மா காதம்பரி கதவை திறம்மா.. அவள் தாழிட்ட கதவை திறவாமல் இருக்க பயந்தார் நயணவாணன்.

மாப்பிள்ளை காதம்பரி கதவை அடைத்துக் கொண்டு திறக்காமல் இருக்கிறாள். எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு. தயவு செய்து வாங்க மாப்பிள்ளை என்று அழைக்க,

மருத்துவமனையில் இருந்த அவன் வேகமாய் காரில் வந்தான்.

வந்த வேகத்தில் அவனது கார் விபத்தில் சிக்கியது. குத்துயிரும் குலை உயிருமாய் இருந்தவனை மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்‌.

காதம்பரியும் விஷம் குடித்து இருந்ததால் அவளையும் அதே மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கேயோ, பிரசவத்தில் சிக்கல் குழந்தையை காப்பாற்றுவது முடியாதக் காரியம் என்று மருத்துவர்கள் பேசிக் கொண்டனர்.

மூன்று உயிரும் பிழைக்குமா? பிழைக்காதா? நிலையில் இருந்தது.

வீல்லென்று குழந்தையின் அழுக்குரல் கேட்டு கண்விழித்தாள் காதம்பரி அவளின் அருகே அவனின் சொரூபமாய் ஒரு ஆண்க் குழந்தை.

காதம்பரி இது வாடகை தாய் மூலமாக மாப்பிள்ளை உனக்காக கொடுத்துட்டு போன உயிர் மா என்று கூறி அழ,

என்னப்பா சொல்றீங்க துடித்தாள் காதம்பரி.

நீ மட்டும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தால் அந்த தங்கமான மனுஷன் இப்ப இந்த சந்தோஷத்தை பார்க்க தன்னை கஷ்டபடுத்திக் கிட்ட மனுஷன் உயிரோட இருந்திருப்பார். அப்பா என்ன சொல்றீங்க. அவருக்கு ஒன்னும் ஆகியிருக்காது‌. அவர் எங்கன்னு சொல்லுங்க அவள் அதிர்ச்சியில் தொண்டையை அடைத்த கண்ணீரோடுப் பேசினாள்.

அவர் இறந்து மூன்று நாட்கள் ஆகிறது. அந்த நல்ல மனுஷன் இந்த சந்தோஷத்தை பார்க்காமலே போய்விட்டார்.

ஒரு பொண்ணுக்கு பொறுமை ரொம்ப அவசியம். நீ மட்டும் அவரோடு அனுசரித்து வாழ்ந்திருந்தால்.

ஒருவேளை அந்த தவறான முடிவை அன்று நீ எடுக்காமல் போயிருந்தாள்.....

இன்று இப்படி நடந்திருக்காது‌.

இனி இந்த குழந்தை தான் உனக்கு எல்லாம். இது உன் குழந்தை. அவருக்கு பிறந்த அவரோட உயிர். இந்த உயிரை கொடுத்துட்டு அவர் உயிரை விட்டுட்டாரு. தேம்பி அழுதார் நயணவாணன்.

அம்பலவாணன்னும் மாதவியும் இந்த எதிர்பாராத இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் உடைந்து போயிருந்தனர்.

இருப்பதிலேயே புத்திர சோகம் தானே பெரிது. அந்த வேதனையால் அழுதுக் கொண்டே இருக்க, குழந்தையுடன் அந்த வீட்டிற்குள் நுழைந்தாள் அவள்.

மாதவியின் கண்கள் காதம்பரியை சுட்டெரிப்பதைப் போல் பார்க்க,

இது உங்கள் மகனின் வாரிசு. எதையும் பேசி உங்களை நான் இன்னும் காயபப்டுத்த விரும்பவில்லை அத்தை. இனி இவன் தான் ராகவன். இவனை உங்கள் விருப்படி நீங்க எப்படி உங்கள் மகனை நல் உள்ளோத்தோடு வளர்த்தீங்களோ அப்படி தான் நான் வளர்ப்பேன். அவள் அவர்களின் காலில் விழுந்து அழுதாள்.

மாதவியின் கண்கள் கண்ணீரால் அன்பில் பொங்கி தன் பேரக் குழந்தையை கையில் ஏந்தியது.

.     .     .

Discus