உலகுய்ய வேண்டுமென
உயா்நோக்கம் கொண்டவரே
உண்மை ஒன்றினையே இலட்சியமாய்
உயிர் மூச்சுள்ளவரை கடைபிடித்தீரே

எண்பத்து மூன்று வயதினிலும்
எளிமையுடன் வாழ்ந்து காட்டி
ஏழ்மையின் மடியினில் தவழ்ந்து
ஏணியாக உயா்ந்தவரே

பஞ்சங்கள் எதிலும் வரலாம்
பண்பாளரான் நீயிலா பஞ்சம் வந்துவிட்டதே
பாரத தேசமின்றி உலக நாடுகள்பரிதவிக்குதே
உமைப் பிரிற்து தவிதவிக்குதே

கல்விப் பணிக்கென உமைதியாகம் செய்தீரே
கற்கும் மாணவா்கள் மேன்மையுற
கனவு காணுங்கள் எனும் தாரக மந்திரத்தினை
கற்றுத் தந்து விட்டு மறைந்தனையோ..

l இந்திய நாடும் மக்களும் மேன்மையுற
இரவு பகல் துஞ்சாது திட்டங்கள் பலவகுத்தனையோ
இனி தேவை உனக்கு ஓய்வென நினைத்து
இப்புவியினைத் துறந்து கல்லறை துயில்கொண்டீரோ

அரிய பல விஞ்ஞான தி்றன் கண்டு
அண்டை நாட்டினரையும் வியக்க வைத்தாய்
அயராத உழைப்பினை நாட்டிற்கே அா்பணித்தாய்
இனிய திருமண வாழ்வினையும் வெறுத்து
இளமையினையும் நாட்டிற்கென தியாகம் செய்தாய்
அணுவைப் பிளந்து இறையுடன் கலந்தாய்
எங்கும் நீா் செல்லவில்லை எங்கள்
இளைஞா்களின் சிந்தையுள் கலந்துவிட்டாய்

குடியரசு தலைமைப் பொறுப் பேற்று
குணமிக்க தலைவராய் மிளிர்ந்தாய்
குன்றின் மேலிட்ட விளக்காய் நின்திறன் கண்டு
இந்திய அரசு பாரதரத்னா விருதளித்து கௌரவித்தது

நீா்கண்ட இலட்சிகளில் நிறைவேறாது இருப்பவற்றை
நிச்சயம் செய்து முடிப்போம் நின்னருளால்
நிகரில்லை இந்தியருக்கு வேறொருவரென
நின்பதம் பணிந்து அருளாசி வேண்டுகிறோம்
ஏ.பி.ஜேஃஅப்துல்கலாம் என்ற எங்கள்
விஞ்ஞானியான மெய் ஞானியின்
பதம் தொட்டு கண்ணீா் அஞ்சலி செலுத்தியே
தங்களின் நல்லாசியுடன்விடைபெறுகின்றோம்.

.    .    .

Discus