Image by Pete Linforth from Pixabay
அர்ப்பணிப்பு என்ற வார்த்தை கடவுளுக்காக மட்டும் இல்லை;
குழந்தைகளுக்காகவும் தான்;
ஒரு தாய் தன் பிள்ளையை கருவில் சுமக்க ஆரம்பித்த கணத்தில் இருந்து
தன் வாழ்நாள் முடியும் வரை அதற்காகவே தன்னை முழுவதும் அவள் அர்ப்பணிக்கிறாள்;
கருவறையில் இருந்து கல்லறை வரை;
கடவுளுக்கு நிகராக தன் குழந்தையை பாவிக்கிறாள்;
தன் குழந்தையின் நலனுக்காக அந்த கடவுளிடமே சண்டையிடுகிறாள்;
கடவுளின் அருள் தன் குழந்தைகளுக்கு பரிபூரணமாகக் கிடைக்க தன்னையே காணிக்கை ஆக்குகிறாள்;
பிள்ளையின் பாசத்துக்காக பரிதவிக்கிறாள், அன்பிற்காக ஏங்குகிறாள்;
பிஞ்சு கைவிரல் தொட்டு பார்த்து பூரிப்பு அடைகிறாள்;
தன் வாழ்க்கை முடிவடைந்ததாக தன் பிரவிப்பலனை அடைந்ததாக உணர்கிறாள்;
தங்கை தமக்கை தாரம் மகள் என்று எத்தனை பெயர் சொல்லி அழைத்தாலும் கிடைக்காத பேரின்பம் தாய் என்று கூறியதும் வரும் அதிசயம் என்ன??
ஒரு தாயாக இதில் பெருமிதம் கொண்டு என் போன்ற தாய்மார்களுக்கும் இப்படைப்பைச் சமர்ப்பிக்கிறேன்.
. . .