Photo by Eric Torres: pexels.com/photo/woman-in-black-jacket-standing-beside-mirror-3603942/

உன்னுடன் நடத்தும் போரில்
தோல்வியை மட்டும் தழுவும் நான்
என்று வெல்வென் உன்னை?
நீதான் நான்!  நான்தான் நீ!
இருப்பினும் ஏன் என்னால் முடியவில்லை 
உன்னை வெல்ல?
உன் சொல் நான் கேட்பதில்லை
என் செயல் நீ ஏற்பதில்லை
சரி என்று சொல்கிறாய்
செய்து முடிக்கும் முன்
தவறென்றுமாற்றுகிகிறாய்
நமக்குள் ஒற்றுமை இல்லை
கேள்விகள் மட்டும் பல நூறு
பரிமாற கேட்க்கிறோம்
விடைகளை வெளியில் தேடுகிறோம்
கண்ணாடி முன் நின்று
எனக்குள் இருக்கும்
உன்னோடு நடத்தும் போரில்
என்று வெற்றி காண்பேனோ
அன்றுதான் என் வாழ்வில்
வெளிச்சம் உண்டாகும்போல் தெரிகிறது…

.     .     .

Discus